Saturday, December 7, 2019

எவரெஸ்ட் சிகரத்துக்கு இணையான உயரத்தை அடைந்த 5 வயது சிறுவன்


மலையேற்ற சாகசம் என்பது சவாலான ஒன்று. உயரமான சிகரங்க ளில் ஏறி சாதனை படைத்த வர்களும் உண்டு, அந்த முயற் சியில் உயிரை இழந்தவர்களும் உண்டு. உலகிலேயே மிகப் பெரிய சிகரம் எவரெஸ்ட் சிகரம் இதன் உயரம் 29,029 அடியாகும் (8,848 மீட்டர்). எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து பலரும் சாதனை படைத்துள் ளனர்.
இந்நிலையில், பிரிட்ட னின் 19 உயர்ந்த சிகரங்களை அடைந்ததன் மூலம் எவ ரெஸ்ட்க்கு இணையான உய ரத்தை அடைந்த 5 வயது சிறு வன் புதிய சாதனை படைக்க உள்ளார்.
இங்கிலாந்தின் யார்க் சையர் பகுதியைச் சேர்ந்தவர் சார்லி பாதம். அய்ந்து வய தான இச்சிறுவன் பிரிட்ட னில் உள்ள உயரமான சிக ரங்களில் 19 சிகரங்களில், 6 மாதங்களில் ஏறி சாதனை படைத்துள்ளான்.
இது குறித்து சார்லியின் தந்தை கூறுகையில், ‘எனது மகனின் திறமை ஆச்சரியம ளிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத் தில் இருந்து 19 சிகரங்களை அடைந்துள்ளான். இங்கி லாந்தின் மிக உயர்ந்த சிகர மான ஸ்கேஃபெல் மலையி லும் (3209 அடி) கால் பதித் துள்ளான். கிட்டத்தட்ட 30 ஆயிரம் அடிகள் உயரம் ஏறி யுள்ளான். இது உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிக ரத்திற்கு இணையானதா கும். மிகக்குறைந்த வயதில் இத்தனை ஆயிரம் அடிகளை ஏறி சாதனை புரிந்த சார்லி யின் சாகசத்தை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யும் முயற்சியில் ஈடு பட்டுள்ளேன்’ என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...