இது தொடர்பாக, இந்திய உணவுப் பாதுகாப்பு
மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வெளியிட்டுள்ள தகவல்களின் படி,
இந்தியாவில் 2018-19ஆம் ஆண்டில் உணவுப் பொருட் களில் நடத்தப்பட்ட சோதனையில்
மூன்றில் ஒரு பங்கு உணவுப் பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டவை என
தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 65,000 உணவு மாதிரிகள் சோதனைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் 20,000 மாதிரிகளில் கலப்படம் இருப்பது
உறுதியானது.
இதில், தமிழகத்தில் 5,730 உணவுப்
பொருட்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 2,601 உணவு மாதிரிகளில் கலப்படம்
இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் 19,170 பொருள்களில்
நடந்த சோதனையில் 9,403 பொருள்களில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா
விலேயே உணவு கலப்படத்தில் முதல் இரு இடங்களில் தமிழகமும் உத்தரப்பிரதேசமும்
தான் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment