நாட்டில் உள்ள ஒவ் வொரு குடி மகனுக்கும்
12 இலக்கம் கொண்ட ஆதார் எண் வழங்கும் திட்டத்தை தற்போதைய மத்திய அரசு
கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த நட வடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து
உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.
வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், ஆதார்
எண் செல்லும் என கடந்த வரும் 2018 செப்டம்பர் மாதத் தில் உத்தரவிட்டது.
எனினும், வங்கிக் கணக்குகள், செல் போன் இணைப்பு, பள்ளி மாணவர் சேர்க்கை உள்
ளிட்ட வற்றுக்கு ஆதார் எண்ணை கேட்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவு
பிரப்பித்தனர்.
எனினும் வங்கி கணக் குகள், பரஸ்பரநிதி
முதலீ டுகள், பான் அட்டை, ஓய் வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை,
தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு,
சமையல் கியாஸ் மானியம் ஆகியவற் றுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம்
ஆக்கப்பட்டு உள்ளது. அதேவேளையில் பள்ளி களில் மாணவர் சேர்க்கைக் காக ஆதார்
எண் கேட்கப் படுவதாக செய்திகள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து, ஆதார் எண் இல்லை என்
பதற்காக மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதை தவிர்க் கக் கூடாது என்று பள்ளி
களுக்கு ஆதார் எண்ணை வழங்கும் தனிப்பட்ட அடை யாள ஆணையம் அறிவுறுத்தி
யுள்ளது. இதுதொடர்பாக, ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே
தெரிவிக் கையில், பள்ளி மாணவர் சேர்க்கை உள்ளிட்ட வற்றுக் காக ஆதார் எண்ணை
கேட் கக் கூடாது.
பள்ளிகளில் சேர்க்கப் பட்ட பின்னர்,
சிறப்பு முகாம் களை நடத்தி, மாணவர் களுக்கு ஆதார் எண் கிடைப்பதை
உறுதிப்படுத் தலாம் என்று தெரிவித்தார்.
ஆதார் எண் இல்லை என்பதற்காக மாணவரை பள்ளியில் சேர்க்க மறுத் தால், அது நீதிமன்ற அவ மதிப்பு என்றும் அஜய் பூஷண் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அரசு மற் றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளில் பயிலும் மாண வர்களுக்கு ஆதார் எண் கட் டாயம் என
மாணவர்கள், பெற்றோரின் ஆதார் எண் ணை சேகரித்து ணிவிமிஷி-ல் பதிவு
செய்யவும், ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களிலேயே புதிய
எண்ணை உருவாக்கி பதிவு செய்யவும் உத்தர விடப்பட் டுள்ளது.
மேலும் 5 வயது முதல் 15 வயது முடிவுற்ற
மாணவர் களுக்கு புகைப்படம், கை ரேகை புதியதாக பதிவு செய்ய வேண்டும் என்றும்
தலைமை ஆசிரியர்களுக்கு ஒருங் கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை
அனுப் பியுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment