இந்துக்
குழுமத்தைச் சேர்ந்த "ஃப்ரண்ட் லைன்" சார்பில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர்
அவர்கள் மறைவையொட்டி அப்பொழுது ஒரு சிறப்பிதழை வெளியிட்டிருந்தது.
அதன் தமிழ்மொழி பெயர்ப்பாக வெளி வந்த ஒரு
தொகுப்பு நூல்தான்
"ஒரு
மனிதன்
ஒரு இயக்கம்"
எனும் நூலாகும்.
அதன் வெளியீட்டு விழா, சென்னை இராசா
அண்ணா மலை மன்றத்தில்
நேற்று (6.8.2019) மாலை 6.30 மணி அளவில் தொடங்கி
நடைபெற்றது. மன்றம் நிறைய மக்கள்
சூழ்ந்திருந்தனர். பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் என்று பல்துறை பெருமக்கள்
பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர்.
"ஃப்ரண்ட்லைன்"
ஆசிரியர் விஜயசங்கர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. இராதாகிருட்டிணன் இணைப்புரை
வழங்கினார்.
தி.மு.க. அமைப்புச்
செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
எம்.பி., தன் உரையை
தொடங்கும் போதே - 'தலைவர் கலைஞர்
இல்லாத நிலையில் திராவிட இயக்கத்தை வழி
நடத்தி அழைத்துச் செல்லும் மூத்த தலைவர் ஆசிரியர்
அவர்களே என்று விளித்த போது
அரங்கமே பெரும் கர ஒலி
எழுப்பி தன் மகிழ்ச்சியை பகிர்ந்து
கொண்டது.
நாட்டின்
தற்கால நடப்பினைப் பற்றி விவரித்த ஆர்.எஸ்.பாரதி அவர்கள்
ஒரு நகராட்சி மன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதாக
இருந்தால் கூட ஒரு நாள்
இரு நாள் முன்னதாக அதன்
நகலை உறுப்பினர்களுக்கு அளிப்பார்கள்.
நாடாளுமன்றத்தில்
ஒரு மசோதாவைக் கொண்டு வருவதாக இருந்தால்
உறுப்பினர்களுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு
அதன் நகலைக் கொடுக்க வேண்டும்
என்பது மரபு. எந்த மரபைப்
பற்றியும் கவலைப்படாமல் நேற்று காலையே அவையில்
சமர்ப்பிக்கப்பட்டு, அன்றே விவாதித்து, அன்றே
நிறைவேற்றப்பட்டதாக அறிவிப்பது எல்லாம் எந்த வகை
ஜனநாயகம்? ("பா.ஜ.க.
ஜனநாயகம்" என்ற ஒரு புதிய
சொல்லாடலை உருவாக்கினால் போச்சு)
இதில் இன்னொரு நிலைமை என்னவென்றால்,
மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் கையொப்பம் பெற்ற பிறகுதான் மசோதா
சட்டமாகும். ஆனால் எல்லா விதிகளும்,
மரபுகளும் பிஜேபி ஆட்சியில் காயடிக்கப்பட்டு
விட்டது. 5ஆம் தேதியே சட்ட
அமுல் என்று சொல்லுவதெல்லாம் அசல்
கேலிக் கூத்து என்றார் ஆர்.எஸ்.பாரதி எம்.பி.
ஃப்ரண்ட்
லைன் வெளியிட்ட இந்த நூலை திருமணங்களுக்குப் பரிசாக அளிக்க வேண்டும்
என்று கேட்டுக் கொண்டார்.
ஜனநாயக
விரோத சக்திகளை முறியடிக்க இந்நூல் பயன்படும் என்றும்
கூறினார்.
நூல் வெளியீட்டு விழாவுக்கு தி.மு.க.
தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அனுப்பிய நீண்ட
வாழ்த்துச் செய்தியினை தி.மு.க.
அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
படித்தார்.
இந்து என்.ராம்
"இந்து"க் குழுமத்தின் தலைவர்
என்.ராம் அவர்கள் தனது
தமிழ் - ஆங்கிலம் கலந்த உரையில் கலைஞர்
அவர்களின் தனிச் சிறப்புகளைச் சிலாகித்தார்.
தலை சிறந்த பல தலைமுறைகளைக்
கண்ட அரசியல் தலைவராக கலைஞர்
அவர்கள் நம்மிடையே வாழ்ந்தவர்.
அவரது
94 வயதில் 73 ஆண்டு கால தொடர்புடைய
ஆசிரியர் வீரமணி அவர்கள் இந்த
விழாவில் கலந்து கொண்டு இருப்பது
இந்த விழாவுக்கான தனிச்சிறப்பு என்று குறிப்பிட்ட போது
பலத்த "கர ஒலி"!
என்.ராம் அவர்களுக்கு நூல்கள்
பரிசு
கலைஞர்
பற்றிய புத்தகத்தினைப் பதிப்பித்தும், வெளியீட்டு விழாவினை ஏற்பாடு செய்தும் சிறப்பாக
நடத்திய தி இந்து குழுமத்தின்
தலைவர்
என். ராம் அவர்களுக்கு
பாராட்டினைத் தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர்
தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் சுயமரியாதை
பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள Thoughts of
Periyar, The Old Testament of Indian
Atheism, Self Respect, Periyar Self Respect Movement ஆகிய ஆங்கில
நூல்களை நினைவுப் பரிசாக வழங்கினார்.
60 வருட
சட்டமன்ற அனுபவம்
60 வருடம்
சட்டமன்ற அனுபவம் என்பது வேறு
யாருக்கும் கிடைத்திராத ஒன்றாகும்.
பேச்சுத்
திறமை, இலக்கியத் துறை, நாடகத்துறை, திரைப்படத்துறைகள்
என்று முத்திரை பதித்தவர்.
சமுதாய
ஆதிக்க எதிர்ப்பு, சிறுபான்மையினர் பாதுகாப்பு, சமுக நீதி, பொது
உடைமை என்று கலைஞரின் பொதுத்
தொண்டு விரிந்து கொண்டே போகக் கூடிய
ஒன்றாகும்.
அமைப்புகள்
ரீதியாக திராவிடர் கழகம் - திமுக என்று
பயணித்தவர். சமுதாயம் மற்றும் அரசியலில் முக்கியத்
தலைவராக நம்மிடையே வாழ்ந்தவர் கலைஞர்.
தொழில்,
விவசாயம், மருத்துவத்துறைகளில் தமிழ்நாட்டை முன்னுக்குக் கொண்டு வந்தவர்.
சட்டமன்றங்களில்
உறுப்பினர்கள், தம் கட்சியைச் சேர்ந்தவர்களாக
இருந்தாலும் அவர்களைத் திருத்தக் கூடியவர் கலைஞர் என்ற தகவலையும்
என்.ராம் எடுத்துக் கூறினார்.
கட்சிக்காரர்களை
நாள்தோறும் சந்திக்கும் இயல்பைக் கொண்டவர். தொண்டர்களுக்கும் தலைவர்களுக்குமிடையிலான நெருக்கம் குறையும் போதுதான் சில கட்சிகள் பலகீனம்
அடையக் காரணம் என்று கூறியது
மிகத் துல்லியமான கணிப்பேயாகும்.
நாள்தோறும்
தோழர்களைச் சந்திப்பதோடு "முரசொலி"யில் நாள்தோறும்
கடிதங்களை எழுதி, அந்தத் தொடர்பைத்
தொய்வில்லாமல் புதுப்பித்துக் கொண்டே இருந்த கலைஞர்
அவர்கள் காட்சிக்கு எளியவராக, நேரில்
எளிதில் சந்திக்கக்கூடிய தலைவராக
இருந்தது அவர் வெற்றிக்கான காரணம்
என்பதையும் 'இந்து' ராம் எடுத்துக்
கூறினார். தொலைப்பேசியில்
கூட அவருடன் தொடர்பு கொள்ள
முடியும், சில நேரங்களில் அவரே
தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்வது
உண்டு, பத்திரிகையாளர்கள் என்றால் எந்த நேரத்திலும்
கலைஞர் சந்திக்க முடியும். (பதவிப் பவிசு வந்தால்
பலருடைய நடை உடை பாவனைகள்
எல்லாம் மாறிவிடுவதையும் பார்க்கிறோம் அல்லவா!)
எப்பொழுதுமே
கலைஞர் ஜனநாயகப் பண்பு கொண்டவராகவே நடந்து
வந்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் அங்கமாக அவர் பொது
வாழ்க்கை அமைந்திருந்தது என்பதை
வகைப்படுத்திய "இந்து" ராம் அவர்கள் நெருக்கடி
நிலையை நெஞ்சு நிமிர்த்தி எதிர்கொண்ட
துணிவையும் பாராட்டினார்; அவர் பன்முகத் திறன்
கொண்டவர் - கலைஞர் என்றும் புகழாராம்
சூட்டினார்.
தமிழர்
தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
நூலை வெளியிட்டு உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் கலைஞர்
தன்னைப் பற்றி அறிமுகப்படுத்தும் வகையில்
சொல்லும் பொழுது "மானமிகு சுயமரியாதைக்காரன்" என்று சொன்னதை
நினைவூட்டிய போது மகிழ்ச்சி ஆரவாரம்
- கரஒலி பார்வையாளர்கள் மத்தியில்.
சரியான
இந்தத் தருணத்தில் இப்படிப்பட்ட ஒரு நூலைக் கொண்டு
வந்தமைக்காக தமிழ் கூறும் நல்லுலகம்
"இந்து" குழுமத்திற்கு குறிப்பாக அதன் தலைவர் என்.ராமுவுக்கு நன்றி கடன் பட்டுள்ளது
என்று ஆசிரியர் உள்ளம் திறந்து பாராட்டினார்.
ஆங்கிலத்தில்
வெளிவந்த கட்டுரைக் கருவூலங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு
"ஒரு மனிதன் - ஒரு இயக்கம்" என்ற
பெயரால் சிறப்பாக வெளி வந்துள்ளது. இந்த
முயற்சியில் வெற்றி பெற்ற அனைவருக்கும்
பாராட்டுகளையும், வாழ்த்துக் களையும் தெரிவித்தார்.
வரலாறு
காவிரி நதிக் கரையிலிருந்து தொடங்கப்பட
வேண்டும்; ஆனால் இங்கே கங்கைக்
கரையிலிருந்து தொடங்கப்படுவதையும் சுட்டிக் காட்டினார் ஆசிரியர்.
மாநில சுயாட்சிக்காக முதல் தீர்மானம் போட்ட
ஆட்சிக்குச் சொந்தக்காரர் கலைஞர். (மாநில சுயாட்சிக்காக
ஆணையம் ஒன்றினை அமைத்தார் ராஜ
மன்னார், டாக்டர் இலட்சுமணசாமி முதலியார்,
சந்திரா ரெட்டி இடம் பெற்றனர்.)
மாநில சுயாட்சிக்கான அறிவாயுதம் இந்நூல் என்று புகழாரம்
சூட்டினார்.
கலைஞரின்
வாழ்க்கையை விவரிக்கும் இந்த நூல் ஒரு
வரலாற்றுப் படைப்பு ஆகும் மாநில
சுயாட்சிக்காக அவர் தனது இறுநாள்
வரை சமரசம் செய்யாது வாழ்ந்தார்.
இதுவெறும் நூல் அல்ல இது
ஒரு அறிவாயுதம், கூட்டாட்சித் தத்துவத்தை விளக்கும் அறிவாயுதம்! இந்த நூல் இளைஞர்களுக்கான
கலைஞர் குறித்த ஒரு தகவல்
களஞ்சியம் மட்டுமல்ல, பெரியார் அண்ணா கலைஞர் போன்றோர்களும்
தனி நபர்கள் தான்! ஆனால்
அவர்களை இணைத்தது கொள்கை! அவர்கள் தங்களை
கொள்கையில் இணைத்து தாங்களே ஒரு
இயக்கமாக மாற்றிக்கொண்டனர். கொள்கையில் இணைந்து இயக்கிக்கொண்டு இருக்கும்
நீங்கள் கூட ஒரு இயக்கம்
தான், கலைஞர் வழியில் நாம்
இயங்கிகொண்டு இருக்கும் இயக்கம் என்றும் கூறினார்.
கொள்கையில் மாறுபாடு இருந்தாலும் ஒருவரை ஒருவர் மதிப்பது
தான் தலைசிறந்த மனிதப் பண்பாகும். தந்தை
பெரியார் பிறந்தநாள் "விடுதலை" மலருக்காக ராஜாஜி அவர்களிடம் வாழ்த்துச்
செய்தி கேட்கப்பட்டபொழுது "விடுதலை"யும் ஸ்ரீமான் ராமசாமி
நாயக்கரும் என் அன்பார்ந்த எதிரிகள்"
என்று எழுதி வாழ்த்து செய்தியை
ராஜாஜி அனுப்பியதையும் பொருத்தமாக எடுத்துக் காட்டினார்.
(ராஜாஜி
மறைந்த போது - சுடுகாடு வரை
ன்று இறுதி மரியாதை செலுத்தி
குலுங்கிக் குலுங்கிக் கண்ணீர் விட்டவர் தந்தை
பெரியாராயிற்றே! இந்தப் பண்பாடுகள் எல்லாம்
இன்றைக்கு எந்த நிலையில் இருக்கிறது
என்பதை எண்ணிப் பார்த்தால் கண்ணீர்தான்
வருகிறது)
பெரியாரைத்
துணைக் கொளல், பெரியாரைப் பிழையாமை
என்ற இரு குறள்களும் கலைஞர்
அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் - குறள்கூறும்
அந்தப் பெரியார் தந்தை பெரியார்தான்.
அண்ணா அவர்கள் மறைந்த நிலையில்
யார் அடுத்த முதல் அமைச்சர்
என்ற பிரச்சினை வந்த போது ஒரு
குழப்ப நிலை ஏற்பட்ட அந்த
நேரத்தில், தந்தை பெரியார் அவர்கள்
என்னை கலைஞரிடம் அனுப்பி வைத்தார்.
தந்தை பெரியாரின் கட்டளை
முதல் அமைச்சர் பொறுப்பை இந்தக் காலக்கட்டத்தில் தாங்கள்
ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் - இது என் கட்டளை
என்று கூறுங்கள் என்று தந்தை பெரியார்
சொன்னதை கலைஞரிடம் கூறினேன்.
கட்சியில்
சலசலப்பு இருப்பது பற்றி கலைஞர் சொன்னபொழுது,
அதற்குப் பெரியார் சொன்னது - தொண்டர் களை சரியான
முறையில் வழி நடத்தி சலசலப்பு
களை அகற்றும் திறமையும் கலைஞருக்கு உண்டு என்று
தொடர்ச்சி 7 ஆம் பக்கம்
தந்தை பெரியார் சொன்னதையும் கலை ஞரிடம் எடுத்துச்
சொன்னேன்!
கலைஞர்
அவர்கள் முதல் அமைச்சர் ஆனதன்
பின்னணி இதுதான் என்று திராவிடர்
கழகத் தலைவர் கூறிய தகவல்
பலருக்குப் புதிதாகவே இருந்தது.
(இதுபோன்ற
தகவல்களை வெளியில் வருவதற்கு வாய்ப்புக் குறைவுதானே!)
அய்ம்பெரும்
முழக்கம்!
1. அண்ணா
வழியில் அயராது உழைப்போம்
2. ஆதிக்கமற்ற
சமுதாயம் அமைத்தே தீருவோம்
3. இந்தித்
திணிப்பை என்றும் எதிர்ப்போம்
4. வன்முறை
தவிர்த்து வறுமையை வெல்வோம்.
5. மாநிலத்தில்
சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி!
அண்ணாவின்
முதலாமாண்டு நினைவுநாளில் (3.2.1970) திருச்சியில் மானமிகு கலைஞர் அவர்கள்
இந்த அய்ம்பெரும் முழக்கங்களை வெளியிட்டார். இன்றைக்கும் இது தேவையல்லவா!
நெருக்கடி
நிலைமையை நேர்மையோடு நெஞ்சு நிமிர்த்தி எதிர்த்தவரும்
கலைஞரே - கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால்
ஆட்சிக் காலத்தை நீட்டித்துக் கொண்டிருக்காலாம்
- கொள்கைதான் பெரிது என்று கருதினார்
மானமிகு கலைஞர் அவர்கள்.
- நூல்
வெளியீட்டு விழாவில் ஆசிரியர்
13 ஆண்டுகள்
பதவியில்லாமலிருந்து மீண்டும் பதவிக்கு வந்த அதிசயம்
ஈழத்தமிழர்ப்
பிரச்சினையில் கலைஞரின் பங்கு பற்றி பல்வேறு
சர்ச்சைகள் எழுப்பப் பட்டன. உண்மை நிலை
என்ன என்பதை பத்திரிகையாளர் ஆர்.கே.இராதாகிருஷ்ணன் தன் கட்டுரையில்
தெளிவுபடுத்தியுள்ளார் இந்நூலில்.
கலைஞர்
அவர்கள் கட்சியைக் கட்டமைத்த முறை அலாதியானது.
13 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இல்லாமல் மறுபடியும்
ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தது சாதாரணமானதல்ல. கலைஞரின்
ஓயாத உழைப்பும், கட்சியை நடத்திய நேர்த்தியும்
கட்டமைப்பும், மக்கள் தொடர்பும் தான்
இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
சாதாரண அரசியல்வாதியாக, ஆட்சியாளராக இல்லாமல் அடுத்த தலைமுறையைப் பற்றி
கவலைப்பட்ட ஆட்சியாளராய் கருதப்பட வேண்டியவர் கலைஞர் என்றார்.
செய்தியாளர்
கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுவதில் கலைஞரின்
பாணி அலாதியானது.
ஒரு முறை ஒரு செய்தியாளர்
தேசிய நீரோட்டத்தில் தாங்கள் கலப்பதில்லை என்ற
குற்றச்சாட்டுப் பற்றி கேட்ட போது
- கலைஞர் சொன்ன பதில்:
"ஈரோடு
போனவர்கள் நீரோடு போகமாட்டார்கள்" என்று பளிச்சென்று
சொன்னதை ஆசிரியர் அவர்கள் சொன்ன போது
ஒரே ஆரவாரமும், சிரிப்பும் அரங்கத்தைக் களை கட்டச் செய்தது.
எதிலும்
அவசர முடிவு எடுக்கிறீர்களே என்று
செய்தியாளர் கேள்விக்கு "தவறு - நான் எடுப்பது QUICK
DECISION, NOT HASTY
DECISION" என்று பட்டுத் தெறித்தாற்போல பதில்
சொன்னவரும் கலைஞரே.
கலைஞரின்
நகைச்சுவை
திருச்செந்தூரில்
வைர வேல் காணாமல் போனது
பற்றி சட்டப்பேரவையில் சர்ச்சையாக எழுந்தது. தொடக்கத்தில் வைரவேல் தான் காணாமல்
போனது; கலைஞர் நீதி கேட்டு
நெடும்பயணம் சென்றதால் முருகனும் கோயிலை விட்டுச் சென்று
விட்டான் என்று ஆளும் கட்சி
சார்பில் குற்றஞ்சாட்டிய போது, எதிர்க்கட்சித் தலைவரான
கலைஞர் "அப்படியா? இதுவரை முருகனின் வைரவேல்தான்
காணாமல் போனது என்று சொன்னார்கள்,
இப்பொழுது முருகனும் காணாமல் போய் விட்டனரா?"
என்று பதில் சொன்னபொழுது முதல்
அமைச்சர் எம்.ஜி.ஆர்.
கூட வாய்விட்டுச் சிரித்த சேதியை ஆசிரியர்
அவர்கள் தெரிவித்த போதும் ஒரே சிரிப்பு
அலை மன்றத்தில்.
"ஃப்ரண்ட்
லைன்" ஏடு வெளியிட்ட "ஒரு
மனிதன் - ஒரு இயக்கம்" என்ற
நூலில் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் எழுதிய
கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக்
காட்டினார் ஆசிரியர்.
" கருணாநிதிக்கு
இசைப் பயிற்சியளிக்க எடுத்த முயற்சிதான் அவமானத்தையும்
பல்வேறு சமுகப் படிநிலைகளையும் அவருக்கு
உணர்த்தியது. அன்றைய நாட்களில் இசைப்
பயிற்சிகள் கோயில்களில்தான் நடைபெற்றன. கோயிலுக்கு உயர் ஜாதியினரும் வருவதால்
மற்றவர்கள் கோயிலுக்குள் மேலாடை அணிந்து செல்லத்
தடை விதிக்கப்பட்டிருந்தது. தோள் மீது அணிந்திருந்த
துண்டை இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டியிருந்தது.
காலணி அணியவும் அனுமதி மறுக்கப்பட்டது."
"உண்மையில்
என்னுடைய இசை வகுப்புதான் என்னுடைய
முதல் அரசியல் வகுப்பு. மனிதர்கள்
ஜாதியின் அடிப்படையில்தான் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்என்பதை
இங்குதான் உணர்ந்தேன். மற்றவர்களை அவமானப்படுத்துவன் மூலம் சிலர் மகிழ்ச்சி
யடைவதை நான் கண்டேன். அதேபோல,
தங்கள் பழக்க வழக்கங்களை நடைமுறைப்படுத்துவதன்
மூலம் பெரும்பான்மை மக்களுக்குத் துன்பம் விளைவிப்பதை அவர்கள்
உணரா திருப்பதையும் உணர்ந்தேன்" என்கிறார் கருணாநிதி. அங்கு அவர் கவுரவமாக
நடத்தப்படவில்லை. எனவே அந்த வகுப்பில்
அவர் கலந்து கொள்ளவில்லை." இந்தப்
பகுதி இது ஏ.எஸ்.பன்னீர்செல்வம் எழுதிய கட்டுரையில் இடம்
பெற்றுள்ளது.
தான் மதிக்கப்படவில்லை என்பதிலிருந்து தோன்றியதுதான் கலைஞருக்கான சுயமரியாதை.
சிறுவயதில்
திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போது வாத்தியார் வீட்டுப்
பெண், தான்குடித்த தண்ணீர்க் குவளையைத் தண்ணீர் தெளித்து எடுத்த
போது பெரியாருக்குப் பிறந்தது தான் சுயமரியாதை.
தந்தை பெரியாருக்கும், கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை
இரண்டிலுமே
பாதிக்கப்பட்டது சுயமரி யாதை. தந்தை
பெரியாருக்கும், கலைஞருக்கும் ஏற்பட்ட சுயமரியாதை உணர்வு
இப்படி ஏற்பட்டதுதான்.
இந்த சுயமரியாதை உணர்வு இன்றைய காலக்
கட்டத்தில் மிகவும் தேவையான உணர்வாகும்.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்த சுயமரியாதை உணர்வு
இந்தியா எங்கும் பரவ வேண்டும்.
அதற்கு நாம் என்ன செய்ய
வேண்டும்? இந்த நூல் அனைத்து
மொழி களிலும் மொழி பெயர்க்கப்பட
வேண்டும். இந்நூலின் தலைப்பே ஒரு செய்தியாகும்
என்று குறிப்பிட்டார் திராவிடர்
கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இந்நூலை
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் வெளியிட,
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
பெற்றுக் கொண்டார். பத்திரிகையாளர்
ஆர்.கே.இராதாகிருஷ் ணன்
நன்றி கூற விழா நிறைவுற்றது.
No comments:
Post a Comment