Thursday, August 22, 2019

பெண்களை நிலாவுக்கு அனுப்பும் நாசா!


மீண்டும் நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் பந்தயம் துவங்கிவிட்டது.
அமெரிக்காவிலுள்ள தனியார் விண்வெளி அமைப்புகளான, 'ஸ்பேஸ் எக்ஸ், புளூ ஆரிஜின்' போன்றவை, புதிய ராக்கெட்டு களையும், மனிதர்களை தாங்கிச் செல்லும் விண்கலன்களையும் அடுத்த சில ஆண்டுகளில் ஏவத் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்க விண்வெளி அமைப்பான, நாசா, 2024இல் நிலாவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த முறை போய் காலடி பதித்துவிட்டு வராமல், அங்கேயே தங்கி ஆராயவும் திட்ட மிட்டுள்ளது.
இதற்கு, 8 பில்லியன் டாலர்கள் தேவை என, அரசிடம் கேட்டுள்ளது நாசா.
இதற்கு முன்பு நாசா, தன் அப்பல்லோ வரிசை விண்கலன்கள் மூலம், மனிதர்களை நிலாவில் கால் பதிக்க வைத்தது. இந்த முறை, கிரேக்க தொன்மத்தின்படி, அப்பல்லோவின் சகோதரியான, 'ஆர்டிமிஸ்' பெயரை, நிலா திட்டத்திற்கு சூட்டியிருக்கிறது.
ஏனெனில், இந்த முறை விண்வெளி வீராங்கனையரும் நிலாவுக்கு போய் தங்கி, ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இருக்கின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், இதற்கென முதற்கட்ட நிதியையும் ஒதுக்கி, மீண்டும் அமெரிக்கர்கள் நிலாவுக்குப் போகப் போகின் றனர் என, 'டுவிட்டரில்' அறிவித்திருக்கிறார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...