ரத்தக் குழாய்களின் சுவர்கள் கெட்டி
யாவதால், பல நோய்கள் உண்டா கின்றன. ஏன் வயது ஆக ஆக ரத்தக் குழாய்கள்
கெட்டியாகின்றன என்பது, இதுவரை தெரியாமல் இருந்தது.
அண்மையில், லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லுரி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், அதற்கான காரணத்தை கண்டறிந் துள்ளனர்.
ரத்த நாளங்களின் உட்சுவரின் மீது, காலப்போக்கில் கால்சிய சத்து படிவதால் தான், அவை கெட்டி யாகின்றன.
இதனால், இதய நோய்கள், மூளைத் திறன் குறைதல் போன்ற பல பாதிப்புகள் உண்டாகின்றன.
வயதாவதால் ரத்தக் குழாயின் செல்கள் இறக்கும்போது, அவை, 'பாலி ஏ.டி.பி., ரிபோஸ்' என்ற மூலக்கூறுகளை வெளியிடுகின்றன.
அந்த மூலக்கூறுகள், உடலிலுள்ள கால்சியம்
பாஸ்பேட் படிகங்களை தன்னோடு ஈர்த்துக் கொள்கின்றன. இது தொடர்ந்து
நடக்கும்போது, மிகையாக கால்சியம் படிந்து, ரத்தக் குழாய் சுவர்கள் இறுகி
விடுகின்றன.
செல்கள் காலாவதியாகும்போது, பாலி ஏ.டி.பி., ரிபோஸ் மூலக்கூறுகளை வெளியிடாமல் தடுக்க முடியுமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
பல வகை வேதிப் பொருட்களை சோதித்துவிட்டு,
கடைசியில் பரவலாக கிடைக்கும், ஆன்டிபயாடிக் மருந்தில், அத்தகைய வேதிப்
பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
'மினோ சைக்ளின்' என்ற அந்த வேதிப் பொருளை,
விலங்கு சோத னைகளில் பயன்படுத்தியபோது, விலங்குகளுக்குள், பாலி ஏ.டி.பி.,
ரிபோஸ் உற்பத்தியாவது தடுக்கப் பட்டது.
இதனால், விலங்கு ரத்த நாளங்களில்
கால்சியம் படிவதும் நின்று போனது. அடுத்து, மனிதர்களுக்கும் இதே பலன்
கிடைக்குமா என விஞ்ஞானிகள் ஆராயவிருப்பதாக, 'செல் ரிப்போர்ட்ஸ்' ஆய்விதழ்
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment