Thursday, August 22, 2019

இறால் ஓட்டில் இயற்கை பிளாஸ்டிக்!


உணவு பொருட்களை பாது காப்பாக எடுத்துச் செல்ல பயன் பட்ட பிளாஸ்டிக் தாள்களுக்கு, உலகெங்கும் தடை வர ஆரம்பித் துள்ளது. இதனால், அதே தன் மையுள்ள, ஆனால் சுற்றுச் சூழலுக்கு கேடில்லாத தாளை உருவாக்கும் தேடல் விரைவு படுத்தப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தை சேர்ந்த, 'கியுவான்டெக்' என்ற உயிரித் தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சி யாளர்கள், இறால் போன்ற மீன் வகைகளின் வெளி ஓடுகள் இதற்கு மாற்றாக இருக்கும் என, அடித்துச் சொல்கின்றனர்.இறாலின் வெளி ஓடுகள் கழிவாக எறியப்படுகின்றன. அவற்றை நொதிக்க வைத்தால், ஓட்டிலுள்ள, 'சின்டின்' என்ற இயற்கையான உயிரி பாலிமர்களை பிரித்தெடுக்க முடியும்.சற்று கெட்டியான சின்டினை, வேதிவினை மூலம், 'நெகிழும் தன்மை யுள்ளதாக மாற்றினால், 'சிடோ சான்' என்ற பொருள் கிடைக்கிறது. இதை படலமாக ஆக்கினால், பிளாஸ்டிக் காகிதம் போலவே தெளிவான படலமாக இருக்கிறது.
இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கும் சிடோசான் காகிதம், 90 நாட்களுக்குள் மட்கி விடும் என, விஞ்ஞானிகள் கருது கின்றனர்.இப்போதே ஸ்காட் லாந்தின் சூப்பர் மார்க்கெட்டுகள், சிடோசான் காகிதங்களை தங்கள் உணவு பகுதிக்குப் பயன்படுத்த ஆர்வம் காட்டியுள்ளனர். பிளாஸ் டிக் காகிதத்திற்கு வந்து விட்டது ஒரு மாற்று.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...