கன்னியாகுமரி மாவட்டம், குளச் சலைச்
சேர்ந்த ஆண்டோ லெனின் அந்தோணி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்
செய்த மனுவில், கடந்த மாதம் 18ஆம் தேதி நீரோடி துறைமுக பகுதியில் இருந்து
ஸ்டாலின் என்பவரது படகில் 5 பேர், கேரள ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க
சென்றுள்ளனர். அப்போது படகு புயலில் சிக்கி கவிழ்ந்தது. இருவர் மீட்கப்
பட்டனர்.
மேலும் 2 பேர் உடல்கள் கேரள கடல்
பகுதியில் மீட்கப்பட்டன. மீனவர் ஜான்பாஸ்கோ (44) மட் டும் இதுவரை
மீட்கப்படவில்லை. அவரை மீட்கவும், கண்டுபிடித்து ஆஜர்படுத்தவும் உத்தரவிட
வேண் டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசா ரித்த நீதிபதிகள்
எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர், குமரி மாவட்ட ஆட்சியர் மற்றும்
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டு,
விசாரணையை தள்ளிவைத்தனர்.
No comments:
Post a Comment