Thursday, July 11, 2019

தேசிய மலர் எது?- அரசு விளக்கம்

எந்த மலருக்கும் தேசிய மலர் தகுதி வழங்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவையில் நேற்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் அளித்த பதிலில் கூறியதாவது: சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சகத்தின் சார்பில் கடந்த 2011ஆ-ம் ஆண்டில் புலிக்கு தேசிய விலங்கு தகுதி அளிக்கப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதேபோல, தேசிய பறவையாக மயில் அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கை வெளியானது. ஆனால், அந்த அமைச் சகத்தின் சார்பில் தேசிய மலர் என்ற தகுதி எந்த மலருக்கும் அளிக்கப்படவில்லை. அவ்வாறு எந்த அறிவிக்கையும் வெளியிடப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் நித்யானந்த ராய் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...