கருநாடக அரசின் மேகேதாட்டு திட்டத்துக்கு
எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என்று மத்தியஅமைச்சர்கள் பிர காஷ்
ஜவடேகர்மற்றும் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
எழுதியுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே, மேகேதாட்டுவில்
அணை மற்றும் குடிநீர்திட்டத்தை செயல்படுத்த கருநாடக அரசு திட்டமிட்டு
அதற்கு அனுமதியை பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசு
தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், வரும் 19-ஆம் தேதி
ஆற்றுப்பள்ளத் தாக்கு மற்றும் நீர்மின்திட்டங்க ளுக்கான வல்லுநர்
மதிப்பீட்டுக்குழு கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத் தின் நிகழ்ச்சிநிரலில்,
கர்நாடகா வின் மேகேதாட்டு நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்துக்கான
முதல்கட்ட அனுமதி வழங்குவதற் கான பொருள் சேர்க்கப்பட்டுள் ளது.
இந்நிலையில் மத்திய சுற்றுச் சூழல்
மற்றும் வனத்துறை அமைச் சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய நீர்வளத்துறை அமைச்சர்
கஜேந் திர சிங் ஷெகாவத் ஆகியோருக்கு இதுதொடர்பாக முதல்வர் பழனி சாமி,
நேற்று கடிதங்கள் எழுதி யுள்ளார்.
அந்தக் கடிதங்களில் முதல்வர் கூறியிருப்பதாவது:
மேகேதாட்டு நீர்த்தேக்கம் மற் றும்
குடிநீர் திட்டம் தொடர்பாக கருநாடகாவின் நீராவாரி நிகாம நியமிதா
அமைப்புக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது என்றுகடந்த ஜூன் 24-ஆம்
தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தேன்.
இந்நிலையில், மத்திய சுற்றுச் சூழல் வனம்
மற்றும் பருவநிலை மாற்றத்துறையின்கீழ் செயல்படும் ஆற்றுப்பள்ளத்தாக்கு
மற்றும் நீர் மின் திட்டங்கள் அமைப்பின் வல் லுநர் மதிப்பீட்டுக் குழு
கூட்டம் ஜூலை 19-ஆம் தேதி நடக்க இருப் பதாகவும் அதில், கர்நாடகாவின்
மேகேதாட்டு திட்டத்துக்கு முதல் கட்ட அனுமதி வழங்குவது தொடர்பான பொருள்
நிகழ்ச்சி நிரலில் இருப்பதாகவும் எனக்கு தகவல் வந்தது. கருநாடகாவின்
இத்திட்டம் காவிரி நடுவர் மன்றத் தின் இறுதி ஆணை மற்றும் உச்ச
நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவ தாக அமைந்துள்ளது.
கருநாடக அரசின் மேகேதாட்டு திட்டத்துக்கு
கடும் எதிர்ப்பை மத்திய அரசிடம் பதிவு செய்துள்ள தமிழக அரசு, அந்தத்
திட்டம் தொடர்பான திட்ட அறிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும்
தெரிவித்து வருகிறது. கருநாடகஅரசு, இந்தத் திட்டம் தொடர்பாக தமிழகம்
மற்றும் இதர காவிரி படுகை மாநிலங்களின் முன் அனுமதியையும் பெறவில்லை.
காவிரியின் மேல் பகுதி மாநிலமான கருநாடகா மேகேதாட்டு உள் ளிட்ட எந்த ஒரு
திட்டத்தை செயல்படுத்தினாலும் காவிரி ஆறால் பயன்பெறும் கீழே உள்ள
மாநிலங்கள் தங்கள் பங்கு நீரை பெறுவது கடுமையாக பாதிக்கப் படும்.
மேலும், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில்
தமிழக அரசு இடைக் கால முறையீட்டு மனுவையும் நீதிமன்ற அவமதிப்பு மனுவையும்
தாக்கல் செய்து அந்த மனுக்கள் நிலுவையில் உள்ளன. இந்தச் சூழலில், தாங்கள்
தலையிட்டு வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் 25-ஆவது கூட்டத்தின் நிகழ்ச்சி
நிரலில் இருந்து, மேகேதாட்டு திட்டத்துக்கு முதற்கட்ட அனுமதி வழங்குவது
தொடர்பான பொருளை கைவிட வேண்டும். மேலும், கரு நாடக அரசின் தற்போதைய திட்
டம் மற்றும் எதிர்காலத்தில் கொண்டு வரும் திட்டங்களையும் தள்ளுபடி செய்து
திருப்பி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண் டும். இவ்வாறு அதில்
கூறியுள்ளார்.
மேலும், அமைச்சர் கஜேந்திர சிங்
ஷெகாவத்துக்கு எழுதிய கடிதத்தில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை
அமைச்சகத்துக்கு தனது கோரிக்கையை எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கும்படி
கூறியுள்ள முதல்வர் பழனிசாமி,
‘‘மேகேதாட்டு திட்டமானது,
உச்சநீதிமன்றத்தால் மாற்றம் செய் யப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்
தீர்ப்பை அப்பட்டமாக மீறுவதாக அமைந்துள்ளது. எனவே, மேகேதாட்டு திட்டம்
மட்டுமின்றி, கருநாடக அரசால் காவிரி படுகையில் தமிழகம் மற்றும் இதர
மாநிலங்களின் முன்அனுமதி பெறாமல் கொண்டு வரப்படும் எந்தத் திட்டமாக
இருந்தாலும் அனுமதி அளிக்கக் கூடாது என்று நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு
உத்தரவிடவேண்டும்’’ என்றும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment