Thursday, July 11, 2019

2027ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும் அய்.நா. தகவல்

உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் தற் போது இந்தியா, சீனா வுக்கு அடுத்தப்படியாக 2ஆ-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் எட்டே ஆண்டுகளில் அதாவது 2027ஆம் ஆண்டுக்குள் இந்தியா, உலக மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அய்.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உலக மக்கள் தொகை தற்போது 770 கோடியாக உள்ளது. 2050ஆ-ம் ஆண் டுக்குள் உலக மக்கள் தொகையின் எண் ணிக்கை மேலும் 200 கோடி அதிகரித்து விடும்.

அதாவது 2050ஆ-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை 970 கோடியாக அதிகரித்து விடும். அதற்கு அடுத்த சில ஆண்டுகளில் உலக மக்கள் தொகை ஆயிரம் கோடியை கடந்து விடும்.

மக்கள் தொகை அதி கரிப்பு விகிதம் உலக அளவில் இந்தியாவிலும், நைஜிரியாவிலும் தான் மிக அதிகமாக உள்ளது. இன்னும் 8 ஆண்டுகளில், 2027-இல் இந்தியா உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து விடும். 2050ஆ-ம் ஆண்டுக் குள் இந்தியாவின் மக்கள் தொகை 273 கோடியாக உயர்ந்து விடும். நைஜீரியா நாட்டின் மக்கள் தொகை 200 கோடியாக அதிகரித்து விடும்.

இந்தியாவிலும் நைஜீரியாவிலும் பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இந்த இரு நாடுகளிலும் அடுத்த 30 ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரிப்பது, மிக, மிக அதிக அளவில் இருக்கும். இவ்வாறு அய்.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...