Monday, July 22, 2019

"பாரதீய ஜனதாவின் அரசியல் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்துவதே எனது விருப்பம்!'' - குமாரசாமி

தான் அதிகாரத்தில்ஒட்டிக் கொண்டிருக்கவில்லை என்றும், பாரதீய ஜனதா கட்சியின் ஜனநாயகப் படு கொலைகளையும், அக்கட்சி யின் தரத்தையும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் எனவும் கூறியுள்ளார் கருநாடக முதல் வர் குமாரசாமி.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பாரதீய ஜனதாக் கட்சி, கருநாடக அரசியலை மட்டும் சீர்குலைக்கவில்லை. மட்ட மான அரசியலை நடத்துவதற் கான ஒரு புதிய அளவு கோலையே தீர்மானித்து வருகிறது அக்கட்சி. நான் பதவியில் ஒட்டிக் கொண்டி ருக்கவில்லை. பாரதீய ஜன தாவின் பித்தலாட்டங்களை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டுமென்பதுதான் எனது விருப்பம்.
ஆளுநர் மாளிகையை பக டைக் காயாகப் பயன்படுத்தி, நம்பிக்கை வாக்கெடுப்பிற் கான காலக்கெடுக்களை விதிக்கிறது அக்கட்சி. ஆளுங் கட்சியின் பல சட்டமன்ற உறுப்பினர்களை வலுக்கட் டாயமாக கடத்திச்சென்று அடைத்து வைத்துள்ளது அக்கட்சி. பாரதீய ஜனதா தலைவர்களும் நிர்வாகிகளும், எங்கள் உறுப்பினர்களுடன் இணைந்து சிறப்பு விமானத் தில் மும்பை செல்லும் காணொலிகளே இதற்கு சாட்சி.
நான் உடனடியாக பதவி விலக வேண்டுமென்று கேட்கும் பாரதீய ஜனதா, தனது நோக்கத்திற்காக ஆளுநர் மாளிகையை பயன்படுத்திக் கொள்கிறது. அரசியல் நன் னெறியைப் பற்றி பேசிக் கொள்ளும் பாரதீய ஜனதா, நடைமுறையில் அவற்றை எப்படி அலங்கோலப்படுத்து கிறது மற்றும் அரசியல் சாசனத்தை எப்படி கேலிக் குள்ளாக்குகிறது என்பதை நாடே பார்க்கிறது'' என்றார்.
மேலும், மும்பை சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப் பட்டுள்ள அதிருப்தி சட்ட மன்ற உறுப்பினர்கள் அனை வரும் கருநாடகம் திரும்பி, சட்டமன்ற கூட்டத் தொட ரில் கலந்துகொள்ள வேண்டு மென கோரிக்கை விடுத்தார் குமாரசாமி.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...