இப்போ துள்ள கடன் அளவையே எதிர்வரும்
நான்கு ஆண்டு களில் எதிர்கொள்வது அர சுக்கு கடினமாக இருக்கும் என்று
தணிக்கைத் தலை வரின் அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் நிதிநிலை குறித்த தணிக்கை
தலைவரின் அறிக்கை சட்டப்பேரவையில் 20.7.2019 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப் பட்டுள்ளதாவது:-
கடந்த 2013--14-ஆம் நிதி யாண்டில்
ரூ.1,788 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை இப்போது உயர்ந்துள்ளது.
2017--18-ஆம் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை அளவு ரூ.21,594 கோடியாக
இருந் தது. பல கடன்களை ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒருங்கே திரும்பச்
செலுத்துவது அந்த ஆண்டின் வரவு-செலவுத் திட் டத்தில் பெரும் நிதிச் சுமையை
ஏற்படுத்தும். கடன்களைத் திரும்பச் செலுத்துவதில் உண் டாகும் சுமை
ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.
நடப்பு நிலுவையில் உள்ள 31.81 சதவீத
கடன்கள் அதா வது ரூ.91,852.93 கோடியை எதிர்வரும் நான்கு நிதியாண் டுகளில்
(2021--22 முதல் 2024-25) திருப்பிச் செலுத்து வதும், எதிர்கொள்வதும் அர
சுக்கு கடினமாக இருக்கும்,
அரசு நிறுவனங்களிலும், போக்குவரத்து
கழகங்கள் போன்ற பொதுத் துறை நிறுவனங்களிலும் அரசா னது ரூ.33 ஆயிரத்து 579
கோடியை முதலீடு செய்துள் ளது. ஆனால், அதிலிருந்து அரசு பெற்ற வருவாய்
கடந்த 2013--14-ஆம் நிதியாண்டில் 0.20 சதவீதமாகவும், 2016--17-ஆம்
நிதியாண்டில் 0.62 சதவீதமாக உயர்ந்து, 2017--18-ஆம் நிதியாண்டில் 0.45
சதவீதமாக குறைந்தது. இதன் படி, முதலீடுகளில் இருந்து பெற்ற வருமானம் மிகச்
சொற்பமாகவே இருந்தது.
கடந்த 2016--17-ஆம் நிதி யாண்டில் ரூ.2.83
லட்சம் கோடியாக இருந்த நிலுவைக் கடன் 2017--18-ஆம் நிதியாண் டில் ரூ.3.26
லட்சம் கோடியாக உயர்ந்தது. நிதிக் கடன் பொறுப்புகளைப் பார்க்கும் போது, அது
மத்திய அரசு வரையறுத்துள்ள 22.54 சத வீதத்தைவிட சற்று அதிகமாக 22.88
சதவீதமாக இருந்தது என்று தணிக்கைத் தலைவர் அறிக்கையில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
No comments:
Post a Comment