புதுடில்லி, நவ.9_ பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலை மையிலான கூட்டணி வெற்றி பெறும் என்ற தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளை, தேர்தல் முடிவுகள் தவறாக்கியுள்ளன.
‘என்.டி.டி.வி’ தொலைக் காட்சியும், ‘டுடேஸ் சாணக்யா’ உள்ளிட்ட அமைப்புகளும் தேர்தலுக் குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளை நடத்தின. அவற்றில், பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக் கும் என்று கூறப்பட்டிருந் தது. என்டிடிவி நடத்திய வாக்குக் கணிப்பில், பாஜக கூட்டணிக்கு 120 முதல் 130 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப் பட்டிருந்தது. ‘டுடேஸ் சாணக்யா’ அமைப்பு நடத்திய வாக்குக் கணிப் பில் பாஜக கூட்டணிக்கு 155 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப் பட்டிருந்தது.
எனினும், பிகாரில் மதச்சார்பற்ற சுயமரியா தைக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதன் மூலம், இந்த வாக்குக் கணிப்புகள் பொய்த்துவிட்டன.
இந்நிலையில், தவறான வாக்குக் கணிப்புகளை வெளியிட்டதற்காக அவை மன்னிப்பு கோரி யுள்ளன.
இந்நிலையில், தவறான வாக்குக் கணிப்புகளை வெளியிட்டதற்காக அவை மன்னிப்பு கோரி யுள்ளன.
இதுகுறித்து டுடேஸ் சாணக்யா அமைப்பு வெளியிட்ட டிவிட்டரில் கூறியதாவது:
பிகார் தேர்தல் நில வரத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியாததற்காக, அனைத்து நண்பர்களிட மும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். வெற்றி பெற்ற கூட்டணிக்கு வாழ்த் துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்தப் பதிவில் கூறப்பட் டிருந்தது.

என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராய், தொலைக் காட்சியில் கூறியதாவது:
பொதுவாக, களத்தில் சேகரிக்கப்படும் தகவல்கள் நம்பத்தகுந்ததாக இருக் கும். ஆனால், இந்த முறை தகவல்கள் தவறாக அமைந்துவிட்டன. எங்கே தவறு நேர்ந்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். எனினும், தவறுகளுக்கு பொறுப் பேற்று மன்னிப்பு கேட் டுக் கொள்கிறோம் என் றார் பிரணாய் ராய்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- அனுமதி இன்றி இயக்கப்பட்ட 19 தனியார் பேருந்துகள் பறிமுதல்
- தமிழக மீனவர்கள் 126 பேர் இன்று விடுவிக்கப்படுவார்கள் இலங்கை அமைச்சர்
- இன்றைய ஆன்மிகம்?
- செய்தியும் சிந்தனையும்
- பீகார் தேர்தல் முடிவுகள்: வெளிநாட்டு பத்திரிகைகள் கருத்து
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- DVD பரபரப்பான விற்பனையில்...
- பாஜக ஆட்சிசெய்யும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம்
- மாட்டிறைச்சி பேரில் மதவாதமா? முதல்வர் சித்தராமையா கண்டனம்
- மதச்சார்பின்மை எங்கள் ரத்தத்தில் கலந்துள்ளது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தோற்கடிப்போம் - ராகுல்
- இந்தியா வல்லரசு நாடாக, சகிப்புத்தன்மை உறுதிபடுத்தப்பட வேண்டும் நீதிபதி டி.எஸ்.தாகூர்
No comments:
Post a Comment