எதிர்காலத்தில் அகில இந்திய கூட்டணியாக உருவாகட்டும்!
பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபியை வீழ்த்திய கூட்டணி, எதிர் காலத்திலும் ஒடுக்கப்பட் டோரின் அகில இந்திய சமூகநீதிக் கூட்டணியாக வளர வேண்டும் என்ற கருத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தெரிவித் துள்ளார் - அறிக்கை வருமாறு:
நாடே எதிர்பார்த்த பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஞாயிறன்று (8.11.2015) வெளியாகியுள்ளன.
துவக்கத்தில் பா.ஜ.க கூட்டணி முன்னிலை என்பது போல செய்திகள் வரத்துவங்கின!
நாடே எதிர்பார்த்த பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஞாயிறன்று (8.11.2015) வெளியாகியுள்ளன.
துவக்கத்தில் பா.ஜ.க கூட்டணி முன்னிலை என்பது போல செய்திகள் வரத்துவங்கின!
ஆனால், கடைசியில் லாலுபிரசாத்- நிதிஷ்குமார் - சோனியாகாந்தி இணைந்துள்ள ராஷ்டிரீய ஜனதா தளம், அய்க்கிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கே மக்கள் பெருவாரியான ஆதரவைத் தந்து, பீகார் ஜனநாயக வரலாற்றில் பொன்னேட்டை இணைத்துள்ளனர்.
அந்நாளில் ‘திராவிடநாடு’ ஏட்டில் அறிஞர் அண்ணா தலைப்பிடுவார்
அந்நாளில் ‘திராவிடநாடு’ ஏட்டில் அறிஞர் அண்ணா தலைப்பிடுவார்
“ஆரம்பத்தில் ‘அடானா’
முடிவில் ‘முகாரி’”
முடிவில் ‘முகாரி’”
என்று முதலில் மகிழ்ச்சி ராகம் பாடியவர்கள், பிறகு துயர ராகத்தில் முடிப்பர் என்று அண்ணா எழுதியதை நினைவூட்டுவதாக இது அமைந்தது!
இத்தேர்தலின் முடிவு இந்தியாவின் எதிர்காலம் இருட் டானதல்ல என்பதை நிரூபித்து மக்களின் அவநம்பிக் கையைப் போக்கி புது நம்பிக்கையை விதைத்துள்ளது!
பிரதமர் மோடி 30 பேரணிகள் நடத்தி, நிதிஷ்குமார், லாலுபிரசாத் போன்ற தலைவர்கள் மீது வைத்த தனிப்பட்ட தரக்குறைவான விமர்சனங்கள் ‘சைத்தான்’, ‘டி.என்.ஏ’, ‘மூன்று முட்டாள்கள்’ ‘காட்டுத்தர்பார் நடத்துவோர்’ என்ற தரங் குறைந்த பேச்சு, நிதிஷ் அணிக்குப் பெரும் ஆதரவினைத் திரட்டியுள்ளது!
மோடி அலையோ, விரித்த வலையோ அந்த எளிய மக்களிடம் செலாவணி ஆகவில்லை.

ஆர்.எஸ்.எஸ் - சமூகநீதி, இடஒதுக்கீடு பற்றி பேசிய பேச்சின் எதிரொலியும் இந்த மாபெரும் வெற்றி விளைச்சலுக்கு நல்ல “உரமாக” அமைந்தது!
நிதிஷ், லாலு, காங். கூட்டணி நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி இம்மூன்றையும் காக்கும் காவல் கூட்டணி என்பது வருகின்ற காலத்திற்கும் வழிகாட்டும், அகில இந்திய ஒடுக்கப்பட்டோரின் சமூகநீதிக் கூட்டணி யாகவும் வளர வேண்டுமென்பது அவசியமாகும்.

வெற்றி பெற்ற பீகார் தலைவர்கள் லாலுபிரசாத், நிதிஷ்குமார், சரத்யாதவ், காங்கிரஸ்தலைவர் திருமதி சோனியாகாந்தி ஆகியோருக்குத் தமிழ்நாட்டு ஒடுக்கப் பட்ட மக்கள் சார்பாக நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
இவ்வெற்றி, டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின், பா.ஜ.க ஆர்.எஸ்.எசுக்குப் பாடம் கற்று தரும் முடிவு என்பது சுவரெழுத்து ஆகும்.
சிங்கப்பூர் தலைவர் கி.வீரமணிதிராவிடர் கழகம்
8-11-2015
இவ்வெற்றி, டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின், பா.ஜ.க ஆர்.எஸ்.எசுக்குப் பாடம் கற்று தரும் முடிவு என்பது சுவரெழுத்து ஆகும்.
சிங்கப்பூர் தலைவர் கி.வீரமணிதிராவிடர் கழகம்
8-11-2015
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- மோடியின் இந்துத்துவா பாஜகவுக்கு மரண அடி! வென்றது சுயமரியாதைக் கூட்டணி
- மாடு திருடியதாகப் புரளி தொடர்கிறது! தொடர்கிறது!! முசுலீம் தலைமை ஆசிரியர் படுகொலை!
- தொழில் நிறுவனங்களின் நலன்கள்- மதவாதக் கொள்கைகள் இரண்டும் சேர்ந்ததுதான் புதிய கல்விக் கொள்கை
- பெரியாரையும், லீ குவான் இயூ-வையும் படியுங்கள்! இளையர்களுக்கு சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் அறிவுரை
- 62 சதவிகித மக்கள் மோடி அரசின்மீது கடும் அதிருப்தி! அமெரிக்காவின் வாசிங்டன் போஸ்ட் ஏடு படப்பிடிப்பு
No comments:
Post a Comment