நேற்றைய தொடர்ச்சி...
பெண் உரிமை
பெண்கள் உரிமைக்குக் குரல் கொடுக்காததை ஒதுங்கி இருப்பதை இப்படிச் சாடுகிறார்.
பெண்களுக்குத் தகப்பன் சொத்தில் உரிமை கிடையாதது ஏன்? என்று எந்தப் பெண்ணாவது காரணம் கேட்டாளா? பெண்களை அனுபவிக்கிறவர் அவர் களிடம் வேலை வாங்கிப் பயன் அடை கிறவன் காப்பாற்றமாட்டானா? என்பதுதான். அதற்கேற்ற நகை துணி ஆகியவையே போதும்.
அலங்காரம் ஏன்? மக்கள் கவனத்தை ஈர்க்கும்படியான நகை, துணிமணி, ஆபரணம் ஏன் ? என்று எந்தப் பெண்ணாவது பெற்றோராவது கட்டினவனாவது சிந்திக்கிறார்களா? பெண்கள் அஃறிணைப் பொருள் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
இவ்வாறு கேட்டு, நம் பெண்கள் மாத்திரம் நகைகள் மாட்டும் ஸ்டாண்டா என்று கேட்கிறேன் என்று கேட்கிறார் பெரியார்.
பெண்களுக்கு இது போன்ற அற்புத மான அறிவுரை கூறிய வேறு எந்தத் தலைவனையும் என்னால் காண முடியவில்லை என்று நாம் கூறுவது உண்மை.
ஆண்கள் பார்க்கும் எல்லா வேலைகளையும் ஆண்கள் செய்யும் எல்லாத் தொண்டுகளையும் பெண்கள் பார்க்கச் செய்ய முடியும். உறுதியாய் முடியும் என்பேன். ஆனால் நகைப் பயித் தியம், துணி அலங்காரப் பயித்தியம் அணிந்து கொண்டு சாயல் நடை நடக் கும் அடிமை இழிவு சுயமரியாதை அற்ற தன்மைப் பயித்தியம் ஒழியவேண்டும்.
ஆண்கள் பார்க்கும் எல்லா வேலைகளையும் ஆண்கள் செய்யும் எல்லாத் தொண்டுகளையும் பெண்கள் பார்க்கச் செய்ய முடியும். உறுதியாய் முடியும் என்பேன். ஆனால் நகைப் பயித் தியம், துணி அலங்காரப் பயித்தியம் அணிந்து கொண்டு சாயல் நடை நடக் கும் அடிமை இழிவு சுயமரியாதை அற்ற தன்மைப் பயித்தியம் ஒழியவேண்டும்.
ஆண்கள்தான் காரணமா?
பெரியார் இன்றைக்கு 65 ஆண்டு களுக்கு முன்பே நம் பெண்கள் நாட்டுக்குச் சமூகத்துக்குப் பயன்படாமல் அலங்காரப் பொம்மைகளானதற்கு ஆண்கள் கண்களுக்கு விருந்து ஆன தற்குக் காரணம் இந்தப் பாழாய்ப் போன ஒழுக்கமற்ற சினிமாப் படங்களேயாகும் என்று சினிமாவைச் சாடும் பெரியார் மட்டும் இன்றிருந்தால் சினிமா பெற்ற பிள்ளை சின்னத் திரையையும் சாடாமல் இருக்கமாட்டார்.
இறுதியாக, டீசென்சி, சுத்தம் கண்ணுக்கு வெறுப்பில்லாத ரம்மியம் வேண்டாம் என்று நான் சொல்லுவதாக யாரும் கருதக்கூடாது. அது அவசியம் வேண்டும். ஆனால் அது அதிகப் பணம் கொண்ட மக்கள் கவனத்தை ஈர்க்கத் தகுந்த, பேஷன், நகை, துணிவெட்டு போன்ற அலங்காரத்தால் அல்ல என்றும் சாதாரண குறைந்த தன்மையால் முடியும் என்றும் சொல்லுவேன் என்று விளக் கமும் அளிக்கிறார்.
பெண்மை உயர்வுக்கு வழிகாட்டல்
அத்துடன் பெரியார் கூறும் இந்த அறிவுரையை அனைவரும் கடைப்பிடித்து ஒழுகினால் பெண்மை உயர்வு பெறும். பெற்றோர்கள் தங்கள் பெண் களைப் பெண் என்றே அழைக் காமல் ஆண் என்றே அழைக்க வேண்டும். பெயர்களும் ஆண் கள் பெயர்களையே இட வேண் டும். உடைகளும் ஆண்களைப் போல கட்டுவித்தல் வேண்டும். சுலபத்தில் இது ஆணா, பெண்ணா என்று மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாத மாதிரி யில் தயாரிக்க வேண்டும். பெண் களைப் புருஷனுக்கு நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல் மனித சமுதாயத்திற்குத் தொண் டாற்றும் கீர்த்தி, புகழ் பெறும் பெண்மணியாக்க வேண்டும். பெண்ணும் தன்னைப் பெண் இனம் என்று கருத இடமும் எண்ணமும் உண்டாகும்படியாக நடக்கவே கூடாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் நமக்கும் ஏன் பேதம்? ஏன் நிபந்தனை? உயர்வு தாழ்வு என்ற எண்ணம் எழ வேண்டும். ஏன் இப்படிச் சொல் கிறேன் என்றால் நம் பெண்கள் வெறும் போகப் பொருளாக ஆக்கப்படாது அவர்கள் புது உலகைச் சித்தரிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. இந்தப்டி பேசுகின்ற தன்மையும் இதற்குத்தான்.
இதைப்படிக்கிறபோது, இப்படிப் பெண்மை போற்றிய ஒரு மாபெரும் தலைவன் இல்லையே, பெரியார் என்னும் மாமனிதர் இல்லையே, பெண்களுக்கு வாதிடக் கூடிய வழக்கறிஞர் பெரியார் போல் ஒருவர் இல்லையே என்ற ஏக்கம் எவருக்கும் எழாமல் போகாது.
திரைப்படம் நினைவுக்கு வருகிறது
சக்கரவர்த்தித் திருமகன் என்ற திரைப்படம் ஒன்றில் டேப் சொக்கனாக வரும் கலைவாணர் எம்.ஜி.ஆரிடம் கேள்விகள் தொடுப்பார். அதில் ஒன்று, கோவிலைக் கட்டி வைப்பது எதனாலே? என்பது. அதற்குப் பதிலாக எம்.ஜி.ஆர். பல திண்ணைத் தூங்கிப் பசங்க இருப்பதாலே என்று பதில் கூறுவார்.
இந்தப்பதில் எங்கிருந்து பிறந்திருக் கிறது? என்பதைப் பார்த்தால் எல்லாம் அய்யாவிடத்திருந்துதான் என்பது எல் லோருக்கும் கல்வி என்ற குடியரசுத் தலையங்கத்திலிருந்து கிடைக்கிறது குடியரசுத் தலையங்கம், இது அய்யா எழுதியது இல்லை என்றாலும் இக்கருத்து பெரியார் ஏற்ற கருத்து.
சாணக்கியர் எழுதிய அர்த்த சாத் திரத்தில் கோவில் கட்டப்படுவதற்குரிய காரணங்களைக் காணலாம். உழைக் கின்ற இனம் என்றென்றும் அரசனுக்கும், உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்று கருதப் படுகின்றவர்களுக்கும் அடிமையாயிருக்க வேண்டுமென்று திட்டங்கள் பல வகுத் தனர். அத்திட்டங்களில் கோவில் கட்டு வதும் ஒன்றாகும்.
மதுவிலக்கு சிந்தனை
மதுவிலக்கு என்பது பெரியாரின் இதயத்துக்கு இதமான கொள்கை என்பதற்கான ஆதாரம் இத் தொகுப்பில் காணக் கிடைக்கிறது.
பெரியாரின் மதுவிலக்குக் கொள்கை யாது? என்று எவரேனும் கேட்டால் இதுதான் என்று சொல்லத் தக்க ஆவண மாக இத்தொகுப்பில் விளங்குகிறது மதுவிலக்கு எனும் தலைப்பில் அமைந்த தலையங்கம்.
மதுவிலக்கு வெற்றியடைந்தாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. சர்க்கார் இந்த (மதுபான) வியாபாரம் செய்யக் கூடாது என்பதுதான் எனது மது விலக்குத் திட்டம் என்று பெரியார் அடிக் கடி சொல்லுவார் என்று தலையங் கத்தைத் தொடங்குகிறார். மதுவிலக்கை அரசு நடைமுறைப்படுத்தியது குறித்துத் தம் பாராட்டைத் தெரிவிக்கத் தயங்க வில்லை அவர்.
எப்படியானாலும் மது வியாபாரம் ஜில்லாக்களில் இம்மாகாணத்தில் மூன்றில் ஒரு பாகத்தில் நிறுத்தப் பட்டது பாராட்டுக்குரியதுதான்.; ஆனால் மற்ற இரண்டு பாகத்திலும் உடனடியாக நாளை வருஷமே நிறுத்தினால்தான் இதில் அரசியல் அதிகார வெறி, சூழ்ச்சி, பார்ப்பன சூழ்ச்சி இல்லையென்னலாம் என்று சொல்லும் பெரியார் இயலக்கூடிய அரசு மேற்கொள்ள வேண்டிய ஆலோ சனையையும் முன்வைக்காமல் இல்லை.
ஆளுவோருக்கு அரிய யோசனை
சர்க்காருக்கு ஒரு யோசனை. மது விலக்கால் திருட்டுகள் நடக்கின்றனவ் என்று பயப்பட வேண்டியதில்லை. சில நாளைக்குச் சில இடங்களில் நடந்து தான் தீரும். மற்ற ஜில்லாக்களிலும் நிறுத்தப்படுவதுதான் அதற்குப் பெரு மளவு பரிகாரமாகும். தொழில் இழந்த வர்களுக்குத் தொழில் தேடிக் கொடுக்க பம்பாய் முதலிய வெளிநாட்டுச் சரக்குகள் பலவற்றையும் உடனே நிறுத்திவிட்டுத் தொழிற்சாலைகள், சிறுசிறு தொழிற் சாலைகள் உடனே துவக்க வேண்டும். முதலாளிக்கும், தொழிலாளிக்கும் செலவு போகப் பங்கு ஏற்படுத்திடவேண்டும்.
தீபாவளி வேண்டாம்
குடிஅரசு தொடக்க காலம் தொட்டு தீபாவணி வேண்டாம் திராவிடர்க்கு என்று கூறிவந்த பெரியார் 1946 லும் கேட்கிறார், திராவிடர்களே இன்னுமா தீபாவளி? என்று. தீபாவளி நாளில் திரா விடத் தோழர்கள் செய்ய வேண்டுவது என்ன என்பதையும் பெரியார் அன்றே கூறிச் சென்றுள்ளார்.
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- பெரியார் களஞ்சியம் குடிஅரசு 1946 - தொகுதி (36) பெண்மை உயர்வு போற்றிய பெரியார் எனும் மாமனிதர் (3)
- பெரியார் களஞ்சியம் குடிஅரசு 1946 - தொகுதி (36) பெண்மை உயர்வு போற்றிய பெரியார் எனும் மாமனிதர் (2)
- பெரியார் களஞ்சியம் குடிஅரசு 1946 - தொகுதி (36) பெண்மை உயர்வு போற்றிய பெரியார் எனும் மாமனிதர்
- பெரியார் களஞ்சியம் குடிஅரசு 1946 - தொகுதி 35
- பெரியார் களஞ்சியம் குடிஅரசு 1946 - தொகுதி 35
No comments:
Post a Comment