லண்டன், பிப். 4 - 2030இல் இங்கிலாந்து நாடு ஒரு கிறித்துவ நாடாக இருக்காது. மதநம்பிக்கை அற்றவர்கள் கிறித்துவர்களை விட அப்போது அதிக எண்ணிக்கையினராக ஆகிவிடுவார்கள் என்று ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.
சரிகிறது கிறித்துவ மதம்
ஒவ்வொரு ஆண்டிலும் 5 லட்சம் நம்பிக்கையாளர் களை கிறித்துவ மதம் இழந்து வருகிறது. ஆண்டுக்கு 750,000 அளவுக்கு நாத்திகர்கள், கடவுள் பற்றிய கருத்து அற்றவர்களின் எண்ணிக்கை பெருகி வரு கிறது என்று டெய்லி மெயில் என்ற இதழ் தெரி விக்கிறது. கிறித்துவ மதத்தவரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மற்ற மதத்தவரின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது என்று பொதுமக்கள் அவை (காமன்ஸ்) நூலக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த ஆறு ஆண்டுகளில் 37 விழுக்காடு உயர்ந்து 26 லட்சத்தை எட்டியுள்ளது. இந்துக்களும், புத்தர்களும் 74 விழுக் காடு உயர்ந்துள்ளனர். சீக்கியர்களும், யூதர்களும் சிறிதளவு குறைந்துள்ளனர் என்று மெயில் தெரிவிக் கிறது. கடந்த வாரத்தில் நாடாளுமன்ற கிறித்துவ உறுப்பினர்கள் குழு ஒன்று, கிறித்துவர்களுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள இயலாத பாகுபாடு வளர்ந்து வருவதாகக் கூறியுள்ளது.
நம்பிக்கையற்றவர்கள் எண்ணிக்கை உயர்வு
நம்பிக்கையாளர்கள் மீது மதச்சார்பற்ற எதிர்ப்பு உணர்வு கொண்ட அரசு அடக்கு முறையை மேற்கொள் வதாக, டோரி கட்சியைச் சேர்ந்த முன்னாள் நீதித்துறை அமைச்சர் கேரி ஸ்டிரீட்டர் கூறுகிறார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் 7.6 விழுக்காடு அளவு கிறித்துவர்களின் எண்ணிக்கை குறைந்து 2010 இல் 4. 11 கோடி கிறித்தவர்கள் மட்டுமே இருப்பதை நான் கண்டேன். அதே கால கட்டத்தில் நம்பிக்கை யற்றவர்கள் எண்ணிக்கை 49 விழுக்காடு உயர்ந்து 1.34 கோடி மக்கள் இருக்கின்றனர் என்று அவர் கூறுகிறார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- 2 லட்சம் பொறியியல் விண்ணப்பம் அச்சடிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு
- முத்திரைத்தாள் கட்டணம் ஒரு சதவிகிதம் குறைகிறது
- முல்லைப் பெரியாறு அணை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
- இடைத்தேர்தல் முடிவிற்குப் பின் இந்நாள் அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள் ஆவார்களா?
- பிளஸ்-2 தேர்வில் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படத்துடன் நுழைவுச் சீட்டு
No comments:
Post a Comment