பிப்ரவரி 27 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திராவிட இயக்க நூற்றாண்டுத் தொடக்க விழாவிலும் சரி, நேற்று (1.3.2012) மாலை சென்னை காமராசர் அரங்கத்தில் நடைபெற்ற தி.மு.க. பொருளாளர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் 60ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவிலும் சரி. ஆற்றப்பட்ட உரைகள் காலத்தாற் போற்றப்பட வேண்டிய இன எழுச்சிக் கருவூலங்கள்.
1912இல் டாக்டர் சி. நடேசனார் அவர்களின் முயற்சியால் துவக்கப்பட்ட மெட்ராஸ் யுனைட்டட் லீக் - என்பதுதான் 1913இல் திராவிட சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்தக் காலக் கட்டத்தில் 500 உறுப்பினர்கள் திராவிட சங்கத்தில் இருந்தனர் என்பது சாதாரணமானதல்ல.
1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நீதிக் கட்சி பிறந்தது என்றாலும் அதற்கு அடி எடுத்துக் கொடுத்தது. அடிக்கல் நாட்டியது டாக்டர் சி. நடேசனாரின் மெட்ராஸ் யுனைட்டட் லீக் தான்.
அதன் அடிப்படையில்தான் திராவிடர் இயக்கத்தின் நூற்றாண்டுத் தொடக்க விழா என்று கொண்டாடப்படுகிறது.
இதனைப் பொறுக்க மாட்டாத பார்ப்பனப் பதர்கள் பார்ப்பன ஊடகங்கள் அதனைக் கொச்சைப்படுத்தும் வகையில் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டு வருகின்றன.
திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவை உண்மையான திராவிடர் இயக்கத்தவர்கள் கொண் டாடுகின்றனர் என்றால் இந்தப் பார்ப்பனர்களுக்கு என்ன வந்ததாம்?
பிறக்காத கடவுளுக்கு உருவம் இல்லாத கடவுளுக்கு (அவர்கள் சொன்னதுதான்!) வருடா வருடம் திருக்கல்யாணம் நடத்துகிறார்களே! தந்தை பெரியார் தான் நாக்கைப் பிடுங்கக் கேட்டார்.
போன வருஷம் கட்டின தாலியை எவன் அறுத்துக் கொண்டு போனான்? எவன்அடித்துக் கொண்டு போனான்? என்று கேட்டாரே, இதுவரை எந்த ஒரு கொம்பனாலும் பதில் சொல்ல முடிந்ததா?
பார்ப்பனர்களைப் பிடித்து ஆட்டுகின்ற பயம் என்னவென்றால் நூற்றாண்டு விழா என்ற பெயரால் திராவிட இயக்கத்தின் செயல்பாட்டில் மேலும் ஒரு உத்வேகம் பீறிட்டுக் கிளம்பி விடுமே - அதன் விளைவு பார்ப்பனர்கள்மீதும், எல்லா வகையான ஆதிக்கத்தின்மீதும், பார்ப்பனீயத்தின் மீதும் இடி விழுந்து தொலையுமே - என்ற அச்சம் தான் அவர்களைப் பிடித்து உலுக்குகிறது. அந்த எரிச்சலில்தான் இப்படி கண் மூடித்தனமாகச் சேற்றை வாரி இறைக்கும் வேலையில் இறங்கி இருக்கின்றனர்.
பார்ப்பனர்களுக்கு முன்புத்தி கிடையாது என்பார் தந்தை பெரியார்; அதனை யதார்த்தமாக இப் பொழுது கூடப் பார்க்க முடிகிறதே!
ஒரு பார்ப்பனர் ஒரு தனியார் தொலைக் காட்சியில் மெத்தபடித்த மேதாவிபோல பேசுகிறார்- ஆதி சங்கரரே திருஞானசம்பந்தரை திராவிட சிசு என்று சொல்லி இருக்கிறார்; திராவிட இயக் கத்தைச் சேர்ந்தவர்கள் ஏன் திருஞான சம்பந் தரைப் பார்ப்பனர் என்று முத்திரை குத்துகிறீர்கள் என்ற கேள்வியை முன் வைத்தார்.
அதையே நாம் திருப்பிக் கேட்க முடியும். திருஞானசம்பந்தன் திராவிடன் என்று ஒப்புக் கொள்வார்களேயானால், பார்ப்பனர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று ஒத்துக் கொள்ளத் தயாரா? அப்படி ஒப்புக் கொண்டால் திராவிடர் என்பது எல்லாம் ஒன்றும் கிடையாது - அது ஆங்கிலேயன் செய்திட்ட சூழ்ச்சி என்று கூறி வருவதை பின் வாங்கிக் கொள்ளத் தயாரா?
ஆதி சங்கரர் திருஞானசம்பந்தனை திராவிட சிசு என்று சொன்னது, நாட்டை வைத்துச் சொல்லியிருக்க வேண்டும்.
ஆரியர் - திராவிடர் என்பதை பார்ப்பனர்கள் தங்கள் வசதிக்கேற்ப வளைத்து நெளித்தும் பேசுவதில் ஏமாறக் கூடாது. திராவிடர் கழகம் என்று தந்தை பெரியார் அழுத்தமாகக் கூறியதற்கே காரணம் - அங்கு ஆரியப் பார்ப்பனர்களுக்கு இடம் கிடையாது என்ற அடிப்படையிலும், வரலாற்று உண்மையின் அடிப்படையிலும்தான் என்பதை மறக்க வேண்டாம்.
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment