(தமிழ்நாடு அரசின் பொதுப் பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் ஆர்.வி.எஸ். விஜயகுமார் M.E. (Struct), M.I.E. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை முன்னாள் சிறப்புத் தலைமைப் பொறியாளர் அ.வீரப்பன் M.E.(Struct) FIE, MICI, Dip. LL & AL ஆகியோரின் அரிய சிந்தனை - அனுபவம் இவற்றின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையைக் காப்பாற்றுவோம் எனும் தலைப்பிலும், தமிழ்நாடு அரசு விழிப்பாக இருந்து உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எனும் கருத்தின் அடிப்படையிலும் ஆய்ந்துணர்ந்து வெளியிடப்பட்ட நூலிலிருந்து தரப்படுகின்றன.)
இந்த குறுநூலைப் படிப்பதற்கு முன் கீழே உள்ள 10 கேள்விகளுக்கும் பதில் தெரிந்து கொள்ளுவது மிகவும் தேவை யானது, முழுப் பொருளையும் விரைவாகப் புரிந்து கொள்வதற்கு.
இந்த குறுநூலைப் படிப்பதற்கு முன் கீழே உள்ள 10 கேள்விகளுக்கும் பதில் தெரிந்து கொள்ளுவது மிகவும் தேவை யானது, முழுப் பொருளையும் விரைவாகப் புரிந்து கொள்வதற்கு.
கேள்வி-1: கேரள அரசும், அரசியல் வாதிகளும் முல்லை பெரியாறு அணை யின் பலம் மற்றும் கேரள மக்களின் பாதுகாப்பு குறித்து ஏன் தற்போது அள வுக்கு மீறி அறிக்கைகளுக்கு மேல் அறிக்கைகளாக விட்டுக் கொண்டுள் ளனர்?
கீழ்க்கண்டவை முக்கிய காரணங் களாக இருக்கலாம்.
கீழ்க்கண்டவை முக்கிய காரணங் களாக இருக்கலாம்.
1) உச்சநீதிமன்றத்தில் - அதிகார மளிக்கப்பட்ட Dr.A.S. ஆனந்த் குழுவின் அறிக்கைகள் தயாரிக்கப் பட்டு விரைவில் (பிப்ரவரி 2012) சமர்ப்பிக்கப்பட உள்ளன. அதனுடைய பரிந்துரைகள் கேரளாவி னுடைய பொய் வாதங்களை - அடிப் படையே இல்லாத கட்டுக் கதைகளை நம்பாது அணையின் உண்மை நிலை பற்றி - தமிழகத்திற்கு சாதகமாக இருக்கலாம் என்று கேரளா கருதுவதால்.
2) 1979இல் பொய்க் கதைகளை வேண்டுமென்றே பரப்பி தமிழக அரசை பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ளச் செய்து அணையின் மேல் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்ததைப் போல - வேண்டுமென்றே இப்போதும் அதே காரணத்தைக் காட்டி அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க முயற்சி செய்வதால்.
3) கேரளத்திலும், மத்திய அரசிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருப்ப தால் அதன் செல்வாக்கைப் பயன் படுத்திப் பெறத் தகுதியில்லாத தேவை இல்லாத தீர்வுகளைப் பெறலாம் என்ப தால்.
4) ஒட்டு மொத்தமாகவே உச்சநீதி மன்றத்திற்கு வெளியே இவ்வழக்கைக் கொண்டு வந்து மீண்டும், மீண்டும் பேசி முன்பு ஏமாந்த தமிழகத்தை மீண்டும் ஏமாற்ற நினைப்பதால்.
கேள்வி-2: 1979 ஆம் ஆண்டிலும் 2011 நவம்பர்/டிசம்பர் மாதங்களில் முல்லை பெரியாறு / இடுக்கிப் பகுதிகளில் பல முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக கேரளா அரசு தொடர்ந்து தெரிவிக் கிறது. இதற்கான புள்ளி விவரங்களோ / IMD இந்திய வானியல் ஆய்வு மய்யம் அளித்த நிலநடுக்கத் தகவல்களோ வைத்துள்ளார்களா?
1) கேரள அரசிடம் இது குறித்த ஆதாரப் பூர்வமான புள்ளி விவரங்களோ, நிலநடுக்கத் தகவல்களோ ஏதும் இருப்ப தாக கேரளா இதுவரை வெளிப் படுத்தவில்லை.
2) 19.11.2011-இல் நிலநடுக்கம் ஏற்பட்ட தாக திரு. உமன் சாண்டியும், திரு. ஞ.து. ஜோசப்பும் தெரிவித்த பத்திரிகை தகவல்கள் முற்றிலும் தவறு என்பதை திருவனந்தபுரம் இந்திய வானியல் ஆய்வு மய்யம் அதிகாரபூர்வமாக தெரிவித் துள்ளது. (Times of India - 20-11-11)
3) முல்லை பெரியாறும் இடுக்கி அணையும் நில நடுக்க மண்டலம் ஐஐஐ இல் இருக்கின்றன. IS 1893-2002 இதனுடைய மிக அதிகமான நில நடுக்க அளவு 3.8 ரிக்டர் அளவுகோல். இந்த அளவு சென்னையும், சென்னையைச் சுற்றிய பகுதிகளும் இந்த மண்டலம் III இல் தான் உள்ளன. இங்கே நிலநடுக்கத்தால் எந்தச் சேதமோ கட்டிடங்கள் இடிதலோ இது வரை ஏற்பட்டது கிடையாது. இருந்தாலும் கூட IIT ரூர்க்கியில் பணிபுரியும் கேரளா பேராசிரியர் மூலமாக ரிக்டர் அளவு கோலில் 6.5 நில நடுக்கம் ஏற்பட்டால் முல்லை பெரியாறு சேதம் அடையும் என்று பொய்யான அறிக்கை பெற்றுள்ளனர். எனவே, கேரள அரசும், அதிகாரிகளும் வேண்டுமென்றே உண்மைக்கு மாறான அச்சத்தையும், பீதியையும் கிளப்புகின் றனர். இவற்றை மறுத்து அங்குள்ள அறிவியல் அறிஞர்களும் பொறியாளர் களும் உண்மையைப் பேச முன்வர வேண்டும்.
கேள்வி-2 (தொடர்ச்சி): முல்லை பெரியாறு அணை நிலநடுக்கத்தைத் தாங்கி நிலைத்து நிற்குமா?
- நிச்சயமாக, உறுதியாகச் சொல்லலாம் - தாங்கி நிற்குமென்று. இதோ ஆதாரபூர்வமான பொறியியல் - தொழில் நுட்ப விவரங்கள்.
- முல்லை பெரியாறு அணை - நில நடுக்க மண்டலம் III இல் அமைந் துள்ளது.
- நிலநடுக்க அளவு -III- ரிக்டர் அளவு 3.50 முதல் 4.20 வரை (இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிக அளவு 3.8 (IMD, Thiruvanandapuram) சென்னையும் கூட நிலநடுக்க மண் டலம் III இல்தான் உள்ளது. இங்கே எந்த பாதிப்பும்ஏற்பட்டதில்லை.
- 19.11.2011 கடலினுள் ஏற்பட்ட நில நடுக்கம் - 415 கிமீ தொலைவு - 10 கிமீ ஆழத்தில் லட்சத் தீவுக்கருகில் - இதனால் முல்லை பெரியாறு அணை யில் விரிசல்கள் ஏதும் ஏற்படவில்லை - - Times of India 20.11.11 & 21.11.11 பக்கம் 8 மற்றும் Dr.A.S. ஆனந்த் வல்லுநர் குழு 05-01-12 அறிக்கை/
- நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் - அணையின் 1200 அடி நீளத்திற்கும் 9 அடி இடைவெளியில் 4 விட்ட முடைய 95 கேபிள் துளைகள் இடப் பட்டு - அணையின் அடித்தளத்தில் உள்ள பாறையில் 30 அடி ஆழம் வரை - முன் தகைவுறுத்திய கம்பி கட்டுகள் நுழைக்கப்பட்டு இறுக்கி வைக்கப்பட் டுள்ளன.
- இந்த அணை - புவி ஈர்ப்பு அணை (Gravity Dam) எனவே இதன் மேல்புறத்தில் 12000 டன் எடையுள்ள கான்கிரீட்டும் பின்புற பக்கவாட்டில் அணையின் முழு நீளத்திற்கும் 135 அடி உயரத்தில் - 3.60 லட்சம் டன் எடையுள்ள கான்கிரீட்டும் போட்டு பழைய அணையோடு இணைத்துப் பிணைக்கப்பட்டுள்ளது. மேலும் வலிமை கூட்ட உட்பக்கங்களிலும் சிமெண்ட் கலவை கொண்டு(Grouting) கெட்டிப்படுத்தப்பட்டுள்ளது.
- அண்ணா பல்கலைக் கழக முன்னாள் கட்டுமான வடிவமைப்பியல் பேரா சிரியர், வல்லுநர் Dr.A.R. சாந்தகுமார் அவர்கள் இதை ஆய்வு செய்து 152 அடி உயரம் வரை தண்ணீரைத் தேக்கினாலும் நில நடுக்கத்தைத் தாங்கும் வல்லமை உள்ளது; பாதுகாப் பாக உள்ளது என்று 1999 இல் சான்றுரைத்துள்ளார்.
- இந்த அணை 1895 இல் (116 ஆண்டு களுக்கு முன்) பொறியாளர் பென்னி குக் கட்டிய அணை அன்று. 1981 முதல் 1990 வரை மூன்று முறை வலிமைப் படுத்தப்பட்டு - இன்றும் புதிய அணை போன்று இயங்குகிறது.
- உச்சநீதிமன்றம் நியமித்த பிற மாநில ஆய்வு நிலைய வல்லுநர்கள் - அணை பலமாக இருப்பதாக உறுதி செய்ததன் அடிப்படையில்தான் - அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடிக்கு முதல் கட்டமாக உயர்த்திக் கொள்ளலாம் என 27.2.2006 இல் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.
- I.I.T ரூர்க்கியில் பணிபுரியம் கேரளப் பேராசிரியரின் ஆய்வு அறிக்கை உண்மைக்கு முரணாக 6.5 நிலநடுக்க அளவில் (3.80க்குப் பதிலாக) ஆய்வு செய்யப்பட்டு தரப் பட்டுள்ளது. கற்பனையானது - இது ஒரு தொழில் நுட்ப மோசடி; தொழில் முறைப் பொய் (Technical Fraud & Professional Dishonesty) . நீதியரசர் Dr.A.S. ஆனந்த் குழு இதை ஏற்றுக் கொள்ள இயலாது என்று தள்ளுபடி செய்துள்ளது.
- உலகின் பல பகுதிகளிலும் - தமிழ்நாட்டிலும் 100 ஆண்டுகளுக்கு முன் சுண்ணாம்புக்காரை கொண்டு கட்டப்பட்ட அணைகளும் கட்டு மானங்களும் முறையான பராமரிப்பில் இன்றளவும் உறுதியாக நிலைத்து நிற்கின்றன.
- இதுவரை கிடைத்துள்ள வரலாற்று - புள்ளி விவரத் தகவல்களின்படி சுண்ணாம்புக் கலவைக் காரையால் கட்டப்பட்ட எந்த அணையும் நீர் அழுத்தத்தாலோ / நில நடுக்கத் தாலோ உடையவில்லை.
- இத்தனைக்கும் மேலாக 27.11.2011 அன்று மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னாள் தலைவரும் தொழில் நுட்பப் பொறியாளர் - வல்லுநர் Dr. கே.சி. தாமஸ் (கேரளாவைச் சேர்ந்தவர்) அவர்கள் - வலிமைப்படுத்தப்பட் டுள்ள முல்லை பெரியாறு அணை நில நடுக்கத்தைத் தாங்கி நிற்கும் பாது காப்பாக உள்ளது. கேரளா அரசியல் வாதிகள் சொல்வது சரியன்று என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார். Deccan Chronicle-28.11.2011)
- எனவே, உறுதியாக மீண்டும் வலி யுறுத்திச் சொல்கிறோம். முல்லைப் பெரியாறு அணை நிலநடுக்க - அதிர்வுகளைத் தாங்கி 152 அடி உயர நீர்மட்டம் வரை நீரைத் தேக்கினாலும் வலிமையாக உறுதியாக நிற்கும்.
இந்தியாவில் மட்டுமே 100 ஆண்டு களைத் தாண்டிய மேசன்றி அணைக் கட்டுகள் 143 உள்ளவையாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1) தமிழ்நாட்டில் உள்ள கல்லணையின் - வயது 2200 ஆண்டுகள்.
2) கர்நாடகாவில் உள்ள ஹெப்பலா (in 1000 AD) - வயது 1111 ஆண்டுகள்.
3) கம்பம் அணை - ஆந்திராவில் உள்ளது - 511 ஆண்டுகள்.
4) மகாராஷ்ராவில் உள்ள தாமாபூர் அணை - வயது 411 ஆண்டுகள்.
5) இராஜஸ்தானில் உள்ள இராஜ் சாமண்ந் மற்றும் ஜெய்சாமண்ந் அணை -
6) உத்தரப்பிரதேசத்தில் உள்ள பர்வா சாகர் - வயது 317 ஆண்டுகள்.
முல்லைப் பெரியாறு அணை - பட்டி யலில் 48 ஆம் எண்ணில் வருகிறது - வயது 116 ஆண்டுகள்.
கேள்வி-3: இதைப்போலவே - முல்லை பெரியாறு அணையின் கீழே - இடுக்கி அணைவரை உள்ள 58 கிலோ மீட்டர் பள்ளத்தாக்கில் எப்போதாவது (1976-க்குப் பின்) மிகு வெள்ளம் ஓடியதன் புள்ளி விவரங்கள் கேரளாவிடம் உள்ளனவா? இருப்பின், இந்தப் பள்ளத் தாக்கின் இருகரைகளையும் (மேல் நிலப் பகுதிகளும்) இந்த மிகு வெள்ளம் எப்போ தாவது தொட்டதுண்டா? இல்லை என் றால் 1895ஆம் ஆண்டிற்கு முன்னரோ அவ்வாறு நிகழ்ந்தது உண்டா? இது தொடர்பான தகவல்கள் வேறு ஏதும் உள்ளனவா?
1) 1976-இல் தான் முல்லைப் பெரியாறு அணைக்கு கீழே உள்ள இடுக்கி அணை கட்டப்பட்டது. அதற்குப் பின்பே முல்லை பெரியாறு பள்ளத்தாக்கில் பெரும் வெள் ளத்தின் காரணமாக இரு கரையும் தொடு மளவுக்கு, (இடையில் 100 அடி வேறுபாடு உள்ளது) அதற்குக் கீழே 100 அடி பள்ளம் வரையும்கூட எந்த பெரு வெள்ளமும் ஓடியதாக புள்ளி விவரங்கள் இல்லை. இதன் காரணமாக இடுக்கி அணையின் பள்ளத்தாக்கின் இரு பக்கங்களிலும் உள்ள மக்களுக்கு எந்தச் சேதமும் ஏற்பட்ட தாகவும் தகவல் இல்லை.
(தொடரும்
No comments:
Post a Comment