Saturday, February 4, 2012

தபால் நடைமுறையைக் கண்டுபிடித்தவர் யார்?


ரவ்லண்ட் ஹில் 1840இல் தபால் நடைமுறையைக் (ஞநலே ஞடிளவ)  கண்டு பிடித்தார் என்று ஒவ்வொரு பள்ளிச் சிறுவனும் முன்னொரு காலத்தில் கூறுவார்கள். ஆனால்இன்று அது உண்மை அல்ல என்பதை அனைவரும் அறிவர்.
240 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் தபால் நடைமுறையை வில்லியம் டாக்ரா என்பவர் ஏற்கெனவே உருவாக்கி விட்டிருந்தார். ஒரு பவுண்டு எடை வரை கொண்ட பொட்டலங்கள் கையாளப்பட்டன. ஒரு நாளைக்குப் பல முறை விநியோகம் நடைபெற்றது. கூடுதலாக ஒரு பென்னி கட்டணத்தில் லண்டனைச் சுற்றி 10 மைல் சுற்றளவில் இருக்கும்  விலாசங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. 1683இல் அரசினால் நடத்தப்படும் தபால் அலுவலகத்திற்கு தனது வியாபாரத்தை ஒப்படைக்க டாக்ரா கட்டாயப் படுத்தப்பட்டார். இந்த அரசு தபால் அலுவலகம் யார்க் பிரபுவின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் அது இரண்டாம் ஜேம்ஸ் அரசரின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.
இங்கிலாந்தில் உள்ள எந்த மாநகரம் அல்லது நகரத்தில் வேண்டுமானாலும் பென்னி தபால்கள் உருவாக்கப் படுவதற்கு 1763 இல் நாடாளுமன்றம் அதிகாரம் அளித்தது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல தபால் அலுவலகங்கள் உருவாகி செயல்பட்டுக் கொண்டிருந்தன. 1840இல் இங்கிலாந்து நாடு முழுமையிலும் ஒரே மாதிரியான பென்னி தபால் அலுவலகங்களை ரோலண்ட் ஹில்ஸ் உருவாக்கினார். அதன் பின்னர் பென்னி பிளாக் என்று அழைக்கப்பட்ட ஒட்டுவதற்காக பசை கொண்ட தபால் தலையை முன்னதாகவே பணம் கொடுத்து வாங்கி ஒட்டி அனுப்பும் நடைமுறை உருவானது.  1898 இல் அரசரின் பென்னி தபால் போக்குவரத்து ஆங்கிலேய சாம்ராஜ்யம் முழுமைக்கும் விரிவுபடுத்தப் பட்டது.
முதன் முதலாக ஏற்பட்ட உண்மையான தபால் சேவையை மேற்கொள்ள பலரும் முன்வந்தனர். கி.மு. 2400க்கு முன்னமேயே எகிப்து நாட்டின் அரசர்கள் ஒரு கூரியர் சேவையை உருவாக்கியிருந்தனர்.  தபால் உறை கி.மு. 2000 வாக்கில் அசிரியாவில் கண்டுபிடித்துப் பயன்படுத்தப்பட்டது. தபால்களும், தபால் உறைகளும் மண்ணால் செய்யப்பட்டிருந்தன.  பெர்சிய சாம்ராஜ்யத்தை நிறுவின சைரஸ் பேரரசர் (Sylrus the Great)  (கி.மு. 551-479) கண்டுபிடித்த ஒரு விரைந்த கூரியர் (தபால்) சேவை ஹெரோடோடசை (Herodotus)  வெகுவாகக் கவர்ந்தது. தபாலை விட செய்தி அதிவேகமாகப் பரவுகிறது என்று கன்ஃபூசியஸ் (கி.மு.551-479) எழுதினார். அந்த நேரத்தில் சீனாவிலும் ஒரு தபால் நடைமுறை இருந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.
தபால் (Post) என்னும் சொல் வைக்கப்பட்டது (placed) என்ற பொருள் தரும் posita   என்ற லத்தீன் சொல்லில் இருந்து வந்தது. இதன் வினைச் சொல் வை என்னும் பொருள் தரும் ponere என்ற சொல்லாகும். ரோமானிய தபால் சேவை இரு அடுக்கு கொண்டது. முதல் தரமான தபால்கள் குதிரை மூலம் சென்றன; மற்றவை எருதுவண்டியில் சென்றன. பணப்பை அல்லது பை என்ற பொருள் தரும் பழைய பிரெஞ்சு சொல்லான male என்பதிலிருந்து உருவான சொல் ‘mail’ என்ற சொல்.
ரவ்லன்ட் ஹில்லின் பென்னி போஸ்ட் திட்டத்தை 1840இல் போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாக இருந்த லிச்பீல்ட் பிரபு கடுமையான ஆனால் தொலைநோக்கு கொண்டவர் என்று விமர்சித்தார். ஆனால் அத்திட்டம், குறிப்பாக  விக்டோரியா மகாராணியிடம் பெரு வெற்றி பெற்றதாக ஆனது. பென்னி பிளாக் தபால்தலை மீது அச்சிடப்பட்டிருந்த தனது பக்கவாட்டு ஓவியத்தை அவர் பெரிதும் விரும்பினார்.  அடுத்த 60 ஆண்டு காலத்தில் வெளியிடப்பட்ட அனைத்து தபால் தலைகளிலும்  அதே படத்தைத்தான் உபயோகப்படுத்தவேண்டும் என்று அவர் ஆணையிட்டார்.
முதல் தபால் தலை வெளியிடப்பட்டதில் இருந்து ஓராண்டு காலத்துக்குள் தபால்தலை சேகரிப்பவர் தோன்றி விட்டார்.  தனது படுக்கை அறை சுவர்கள் முழுவதையும் மறைக்கும் அளவுக்குத் தனக்கு தபால் தலைகள் தேவை என்று ஓர் இளம் பென் தி டைம்ஸ் இதழில் விளம்பரம் அளித்தார். தபால் தலையை முதன் முதலாக ஆங்கிலேயர்கள்தான் வெளியிட்டனர் என்பதால், அவர்களின் தபால் தலைகளில் அது யாருடைய அதிகாரத்தில் வெளியிடப்படுகிறது என்று குறிப்பிடப்படத் தேவையில்லை என்ற தனிப் பெருமையைப் பெற்றிருந்தது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’   பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...