விடுதலை தந்த அறிக்கை
ஆரியர் வேறு தமிழர் (திராவிடர்) வேறு என்று உண்மையாய்க் கருதுகிற மக்கள் ஆரியன் திராவிடத் தலைவனைச் சூழ்ச்சி செய்து கொன்ற பண்டிகை என்பதாகிய தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடலாமா? ஆரியர்களால் அழிக்கக் கருதி சூழ்ச்சி செய்யப்பட்ட தமிழைக் காப்பதற்காக இந்தியை எதிர்த்த 1300 பேர் சிறை சென்ற பிறகும் நடராசன், தாளமுத்து ஆகிய இருதமிழ் (திராவிட) வீரர்கள் பலிபீடமேறி உயிர்தந்த பின்பும் உண்மைத் தமிழ்மக்கள் ஆரியப் பண்டிகையான தீபாவளி கொண்டாடினால் ஆரியன் உங்களை மானமுள்ள சுயமரியாதையுள்ள, சுத்த ரத்தமுள்ள தமிழன் என்று கருதுவானா? தமிழர்களே யோசியுங்கள் மானமிழந்து வாழ்வதும் மருத்துவன் குப்பையில் வாழ்வதும் ஒன்றேயாகும்
குறிப்பு: ஆகையால் தீபாவளி கொண்டாடுவது மானமற்ற தன்மை என்று உணருபவர்கள் தங்கள் பெயரையும் மற்றும் இதை ஒப்புக் கொள்ளுபவர் பெயர்களையும் கையெழுத்து வாங்கி அனுப்ப வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment