தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி
சென்னை, செப் 2-பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க, சட்டப்பேர வையில் தீர்மானத்தை நிறைவேற்றியதையடுத்து, அமைச்சரவையில் முடிவு எடுக்க வேண்டும் என்பது முக்கியமாகும் என்று கலைஞர் கூறி னார். சென்னை அண்ணா அறிவாலயத் தில், தி.மு.க. தலைவர் கலைஞர் நேற்று அளித்த பேட்டி: கேள்வி: அன்றாடம் ஆள்களை குறி வைத்து கைது செய்கிறார்களே?
பதில்: ஏற்கெனவே இருந்த நெருக்கடி கால நிகழ்ச்சிகள், இப்போது மீண்டும் தொடர்கின் றன.
கேள்வி: உள்ளாட்சி மன்றத் தேர்தல் வரப் போகிற நேரத்தில் உங்கள் கட்சியின் வெற் றியை இது பாதிக்காதா?
பதில்: திட்டமிட்டு இப்படிச் செய்கிறார் கள். இது பாதிக்கிறதா இல் லையா என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகுதான் தெரியும்.
கேள்வி:5ஆம் தேதி முதல் சட்டமன்ற நிகழ்ச் சிகளில் கலந்து கொள்வ தாகச் சொல்லியிருக்கி றீர்கள். ஏற்கெனவே இரண்டு முறை கேட்டும் ஒரே பகுதியில் உங்கள் கட்சி சட்டமன்ற உறுப் பினர்கள் அமர இடம் தரவில்லை. இப்போது, உங்கள் அணுகுமுறை எப்படியிருக்கும்?
பதில்: உங்களைப் போன்றவர்கள் என்ன கருத்துக்களை சொல்கி றீர்களோ, அதன்படி நடக்கும்.
கேள்வி: பேரவையில் 3 பேரின் தூக்குத் தண் டனையை ஆயுள் தண் டனையாக குறைக்க தீர்மானம் நிறைவேற்றி யிருக்கிறார்கள்.
அது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: தமிழக மக் களிடையே எழுந்த எழுச்சிக்குப் பிறகு, தீர் மானம் நிறைவேற்றுகிற அள வுக்கு முன்வந்த தற்கு பாராட்டு தெரிவிக் கிறேன்.ஆனால், அமைச் சரவையில் முடிவெடுக்க வேண்டும் என்பது முக்கி யம்.
கேள்வி: மத்திய சட்ட அமைச்சர், சட்ட சபை தீர்மானம் கட்டுப் படுத்தாது என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்: சட்ட அமைச் சர் என்ன சொன்னார் என்பது பற்றி சட்ட நிபுணர்களோடு கலந்து பேசித்தான் பதில் சொல்ல முடியும். இவ் வாறு கலைஞர் கூறி னார்.
No comments:
Post a Comment