Friday, September 2, 2011

செருப்பு ஆண்ட நாடு இது!


ஏழாயிரம் பண்ணையில் பெரியார் முழக்கம்
உண்மையிலேயே இந்த நாட்டை யார் ஆண்டாலும் நமக்குக் கவலையில்லை. ஒரு காலத்தில் ஒரு ஆரி யனின் ஒரு ஜதை செருப்பு 14 வருஷ காலம் இந்த நாட்டை அரசாண்டதாக உள்ள கதையை பக்தி விஸ்வாசத்தோடு படிக்கும் மக்களுக்கு மனிதனே அல்லாமல் ஒரு இழிவான மிருகம் நாய், கழுதை ஆண்டால் கூட அது அதிகமான அவமானம் என்றோ குறையென்றோ நான் சொல்ல வரவில்லை. ஆனால் மனிதனானாலும் கழுதையா னாலும் என்ன கொள்கையோடு என்ன முறையோடு ஆட்சி புரிகின்றது; அதனால் பொதுமக்களுக்கு என்ன பலன் என்பதுதான் என்கவலை. ஏழாயிரம் பண்ணையில் 1.6.1937இல் பெரியார் நிகழ்த்திய உரையில் இருந்து.
குடிஅரசு 6.6.1937

சீர்திருத்தங்களுக்கு, ஜாதிக்கட்டுப்பாடுகளும் பழக்க வழக்கங்களும் முட்டுக்கட்டை போடலாம். ஆனால் சீர்திருத்தங்களுக்கு முட்டுக்கட்டை போடும் ஜாதிக்கட்டுப்பாடு களையும் பழக்க வழக்கங்களையும் நாம் தகர்த்துவிட வேண்டும். - டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டின்,
(வழிகாட்டி, கல்லூரணி, 1.7.1935)

பாட்டுக்கு பாட்டு!
பின்னலைப் பின் நின்று இழுப்பான் தலை
பின்னே திரும்பு முன்னே சென்று மறைவான்
வண்ணப் புதுச்சேலை தனிலே புழுதி வாரிச்
சொரிந்தே வருத்திக் குலைப்பான் - தீராத
விளையாட்டுப் பிள்ளை!
யார் இவன் தெருப் பொறுக்கியா?
இல்லை... இல்லை... இந்துமதக் கடவுள்.
- ஏ.வி.பேரின்பம்
நெய்வேலி.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...