Monday, September 26, 2011

பொதுப்பட்டியலிலிருந்து கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர


பொதுப்பட்டியலிலிருந்து கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர அனைத்து மாநில முதல்வர்களையும்-அனைத்து மக்களையும் ஒன்று திரட்டுவோம்!

சென்னை, செப். 26- கல்வியை பொதுப்பட்டியலி லிருந்து மாநிலப்பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்து, அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி வெற்றி கிட்டும் வரை போராடுவோம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலில் கொண்டு வரக்கோரும் மாபெரும் மாநாடு கருத்தரங்கம் 25.9.2011 அன்று ஞாயிறு மாலை 6.30 மணிக்கு பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத் தில் மிகச்சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது.

இம்மநாட்டுக்கு தலைமை வகித்து திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் கள் நிறைவுரையாற்றினார். அவர் உரையாற்றுவ தற்கு முன்னதாக மாநாட்டுத் தீர்மானத்தை தமிழர் தலைவரே முன்மொழிந்தார். அனைவரும் எழுந்து நின்று பலத்த கரவொலி  எழுப்பி (Standing Ovation)  தீர்மானத்தை ஆதரித்து வழி மொழிந்தனர்.

அதன் பின்னர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

அரசியல் வகுப்பெடுப்பதை போல்...

ஒரு(Political Education) வகுப்பெடுப்பதைப் போல மிக அருமையாக கல்வியை மீண்டும் மாநில பட்டிலுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி மிகச்சிறப்பாக இந்த மாநாடு நடை பெற்றிருக்கிறது. இங்கே பேசியவர்கள் அத்துணைப் பேரும் ஒருவர் பேசிய கருத்தை இன்னொருவர் திரும்ப பிரதிபலிக்காமல் அவரவர் களுக்குத் தோன்றிய கருத்துக்களை மிகச்சிறப்பாக அவரவர்களுடைய கோணத்தில் எடுத்துச்சொன்னார் கள். அதுமட்டு மல்ல இந்த கருத்துகளை யாராலும் மறுக்க முடி யாத அளவுக்குச் சொன்னார்கள்.

இந்தியா முழுக்க புரிய வைக்க வேண்டும்

தமிழகம் முழுக்க இந்தியா முழுக்க இந்தக் கருத் துகள் பரவவேண்டும். பல கட்சிகளிடையே சென்ற டைய வேண்டும். பல மாநில முதல்வர்களுக்கும் எடுத்துச்சொல்லி அவர்களுக்கும் இவைகளை புரியவைக்க  வேண்டும். எனவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துகளை வழங்கியவர்களுக் கும், இந்த மாநாட்டு நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்ற அத் துணைப் பேருக்கும் எனது தலைதாழ்ந்த நன்றியை வணக்கத்தை முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கருத்துப் போருக்கு மணி அடிக்கிறேன்

அடுத்து ஒரு கருத்துப்போரை உரிமைப் போரை முன்னெடுத்துச் செல்ல அதற்கு முன்பு மணி அடிக் கப்போகின்ற ஒரு தீர்மானத்தை இந்த மாநாட்டின் சார்பில் இங்குள்ள அவையோர் சார்பாக, இங் குள்ள தமிழின உணர்வாளர்களின் சார்பாக இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

தமிழர் தலைவர் நிறைவேற்றிய தீர்மானம் மக்கள் எழுந்து நின்று கைதட்டல் வரவேற்பு

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். மாநாட்டு அரங்கில் இருந்த ஆயிரக்கணக்கானோர் தமிழர் தலைவரின் கருத்தை வரவேற்று எழுந்து நின்று பலத்த கரவொலி எழுப்பினர். (தீர்மானம் முதல் பக்கத்தில்).

ஏற்கெனவே மாநில அரசிடம் இருந்த கல்வியை  மத்திய அரசு ஏதோ திடீரென பொத்தாம் பொதுவில்  எடுத்துச் செல்வதைப் போல எடுத்து சென்றுவிட்டனர்.

7ஆவது அட்டவணை பிரிவைப் பற்றி முதலில் விவாதம் நடக்கிறது. குறிப்பிட்டே திட்டமிட்டபடி எல்லாமே எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று ஒரு எஜமானத் தோரணையோடு மத்திய அரசு நடந்துகொண்டது. கல்வி மட்டுமல்ல சுகாதாரத் துறையாக இருந்தாலும் இப்படி முக்கிய துறைகள் தங்களிடம்தான் இருக்க வேண்டுமென்று மத்திய அரசு நடத்துகொள்கிறது. மாநில அரசு என்றால் ஒரு அடிமையைப் போலக் கருதினார்கள். இது பற்றி சில செய்திகள் அப்பொழுது வெளியே வந்தன.

காங்கிரஸ்காரர்களே எதிர்ப்பு

பண்டித கோவிந்த வல்லபாய் பந்த் உ.பி. மாநிலத்தைச் சார்ந்தவர். அவர் காங்கிரஸ் காரர். மாநில அரசுகளின் உரிமையில் மத்திய அரசு தலையிடுகிறது என்று எதிர்த்து தனது கருத்தை பதிவு செய்தார்.

நெருக்கடி காலத்தில்...

நெருக்கடி காலத்தைப் பயன்படுத்தி கல்வியை யாரிடமும் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு தனது அதிகாரத்தின் கீழ்  (Union List) கொண்டு சென்று விட்டது. அரசியல் சட்டம் 42,43,44 ஆகிய திருத்தங்கள் விவாதம் இல்லாமலே நிறைவேற்றினார்கள். எல்லா வற்றையுமே மத்திய அரசு தங்கள் விருப்பப்படி மாற்றிக்கொண்டது.

காங்கிரஸ் அரசு தான் இப்படி இருந்தது என்றால் அதற்குப் பிறகு வந்த ஜனதா அரசும் காங்கிரஸ் அரசின் தன்மையிலேயே அதாவது எல்லா அதிகாரங் களும் மத்திய அரசிடமே இருக்க வேண்டும் என்று மாற்றிக்கொண்டது.

அடிப்படை உரிமை
கல்வி ரீதியான, கலாச்சார ரீதியான உரிமை ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிமை உள்ளது என்பது அடிப்படை உரிமைகளிலே சொல்லப் பட்டிருக் கின்றது.

Language, Script, Culture ஆகிய மூன்றும் முக்கியம். இது நமது அடிப்படை பிறப்புரிமை யாகும். இதை யாராலும் மாற்ற முடியாது.

நுனிநாக்கு ஆங்கிலம் பேசுவோர்

இந்தியாவில் ஒரே மாதிரியான சீரான பாடத் திட்டம், ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு இருக்க வேண்டுமென்று சில நுனிநாக்கு ஆங்கிலவாதிகள் சொல்லுவார்கள்.

அரசியல் சட்டத்தை உருவாக்கிய ஆறு பேரில் அம்பேத்கரும் ஒருவர். அவரே சொன்னார். அரசமைப்புச்சட்டம் உருவாக்கப்படுவதில் நான் ஒரு வாடகைக் குதிரையாகவே இருந்தேன் என்றார்.

அரசியல் சட்டத்தை கொளுத்துவதிலும் நான் தான் முதல் ஆளாக இருப்பேன் என்றும் சொன்னார்.  காரணம் ஒடுக்கப்பட்ட உரிமை களுக்கு அவ்வளவு கேடாக இருக்கிறது என்பதை உணர்ந்தார். அரசியல் சட்டத்தை உருவாய்கிய வர்கள் 4 பேர் பார்ப்பனர்கள். ஒருவர் முஸ்லிம் இன்னொருவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த அம்பேத்கர்.

அம்பேத்கர் சொன்னார் பெரியார் செய்தார்

மாநிலங்களவையில் சட்டத்தை கொளுத்து வேன் என்று அம்பேத்கர் சொன்னார். பெரியார் அதை செய்தார். (பலத்த கைதட்டல்) . எனவே கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வர மக்களை ஒன்றுதிரட்டுவோம். இந்தியா முழுவதும் இந்த உரிமையைப் பரப்பி கல்வியை மீண்டும் பெற்றே தீருவோம்.

-இவ்வாறு குறிப்பிட்டார் தமிழர் தலைவர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...