Monday, September 26, 2011

ஒரு தரம்! இரு தரம்!! ஊராட்சிமன்ற தலைவர் பதவி 31 லட்சம் ரூபாய்


ஒரு தரம்! இரு தரம்!! ஊராட்சிமன்ற தலைவர் பதவி 31 லட்சம் ரூபாய்


புதுக்கோட்டை செப் 26- புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே கோயில் வளர்ச்சிக்காக ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவி ரூபாய் 31 -லட்சத் துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அதனால் அதே ஊரில் வசிக்கும் இஸ்லாமியர் களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கீரமங்கலம் அருகே உள்ளது செரியலூர் கிராமம். இந்த ஊர் நிர்வாக வசதிக்காக செரியலூர் ஜமீன் என்றும்  செரியலூர் இனாம் கிராமம் என்றும் பெயரிடப் பட்டு அழைக்கப் பட்டு வருகிறது. இரு ஊராட்சிகளுக்குள்ளும் செரியலூருடன் காசிம்புதுப்பேட்டை கறம்பக்காடு ஆகிய குக்கிராமங்களும் இருக்கின்றன.

இதில் செரியலூர் இனாம் கிராமத்தில் குமார் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகிறார். ஜமீன் கிராமத்தில் கருப்பையன் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகிறார். இரண்டு ஊர்களுக்கும் பொதுவாக மாரியம்மன் கோயில் உட்பட பல கோயில்கள் இருக்கின்றன. வழிபாட்டு முறைகளில் இரண்டு கிராமத்தைச் சேரந்த மக்களும் ஒன்றாக திருவிழா உட்பட பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

சில தினங்களுக்கு முன் இந்த ஊருக்குள் டாடா சுமோ வண்டியில் ஒலி பெருக்கி அலறிச் சென்றது. அதாவது அதில் அந்த ஊருக்குள் உள்ள மாரியம்மன் கோயில் வளர்ச்சி குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதால் கோயில் வளர்ச்சி பற்றி அக்கறை உள்ள அனைவரும் உடனே மாரியம்மன் கோயிலுக்கு வரவேண்டும் என்ற அறிவிப்புடன் ஊர் முழுவதும் அந்த வண்டி வலம் வந்தது.

வழக்கமாய் நடக்கும் கூட்டம்தான் இது என்று கருதிக் கொண்டு பலரும் பேசாமல் இருந்து விட்டார்கள். ஆனால் ஊருக்குள் உள்ள முக்கியமான சிலருக்கு மட்டும் தெரிந்திருக்கிறது. அதனால் சிலர் அங்கு சென்றிருக்கிறார்கள். அங்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம் விடப்பட்டிருக்கிறது.

செரியலூர் இனாம் கிராமம் ரூபாய் 15- லட்சத்திற்கு ஏலம் போயிருக்கிறது. அதே போல் செரியலூர் ஜெமீன் கிராமம் ரூபாய் 16-லட்சத்துக்கு ஏலம் போயிருக்கிறது. அதற்கான முன் பணமும் கோயில் நிர்வாகம் சார்பில் பெறப் பட்டிருக்கிறது. பாக்கித் தொகை ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பு மனு தாக்கல் செய்கின்ற தினத்தில் ஊருக்குச் செலுத்தி விட வேண்டும் என்றும் முடிவாகி இருக்கிறது.

இந்நிலையில் செரியலூர் இனாம் கிராமத்திற்கு உட்பட்ட காசிம் புதுப் பேட்டையில் சுமார 500-க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு இந்த முடிவு தெரிந்து கொதித்துப் போயிருக்கிறார்கள். ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம் போன ரூபாய் 15- லட்சத்தில் பாதித் தொகை ரூபாய் 7.5- லட்சத்தை காசிம் புதுப்பேட்டையில் இருக்கும் பள்ளிவசாசல் வளர்ச்சிக்காக ஒதுக்கித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதனால் இப்போது அந்த ஊருக்குள் இந்து முஸ்லீம் கலவரம் வரும் என்கிற அச்சத்தில் கிராமம் முழுவதும் இருக் கிறது. அந்த தகவலால் சுற்று வட்டாரக் கிராங்களிலும் பரபரப்பு ஏற்ட்டிருக்கிறது.

இந்நிலையில் அது குறித்து தகவ லறிந்த திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பொய்யாமொழி வட்டார வளர்ச்சி அலுவலர் அருண்மொழி ஆகியோர் செரியலூர் இனாம் ஊராட்சி மன்றத் தலைவர் குமார் செரியலூர் ஜமீன் ஊராட்சி மன்றத் தலைவர் கருப் பையன் உட்பட ஊரப்பிரமுகர்கள் பலரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி விசாரித்தனர்.

அப்போது அவர்கள் அதனை மறுத்த தோடு யாரவேண்டுமானாலும் தேரதலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத்தாக்கல் செய்து கொள்ளலாம் என்கிற உறுதி மொழியை ஊராட்சி மன்றத் தலைவர்கள் உட்பட கிராமத்தின் முக்கிய பிரமுகர் களும் பொதுமக்களும் எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர். இதுகுறித்து தற் போதைய ஊராட்சி மன்றத் தலைவர் குமாரிடம் கேட்ட போது ' ஊராட்சி மன்றத் தலைவர் பதவி என்பது லட்சக் கணக்கில் பணம் செலுத்தி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஊராட்சி மிகவும் சிறிய ஊராட்சியாகும்.

அதற்காக பதினைந்து லட்சம் கோயிலுக்குச் செலுத்த வேண்டிய அவசியமுமில்லை. நானும் என் மனைவியும் கடந்த பத்தாண் டுகளாக ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகிறோம். எங்க ஊர் மாரி யம்மன் கோயிலுக்கு என்ன செய்ய வேண் டுமோ அதனை முறையாகச் செய்திருக் கிறோம்.

என் அப்பா இந்தக் கோயிலின் டிரஸ்டியாக 40-ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து திருப்பணிகளைச் செய்தவர். அதனால் 15-லட்ச ரூபாய் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதற்கான தேவையும் கோயிலுக்கு இல்லை. கோயிலுக்கு வருபவர் ஊராட்சி மன்றத் தலைவராகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. யார் வேண்டுமானாலும் கோயிலுக்குச் செய்யலாம். என்றார்.

இப்போது மீண்டும் அதே ஊராட் சியின் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ரூபாய் எட்டரை லட்சத்திற்கு ஏலம் விடப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதனை எஸ்.அருணாசலம் என்பவர் எடுத்திருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

அது சரி இந்திய அரசியலமைப்பு சட்டம் 50-அ(ஓ)வின் படி இந்திய திருநாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துசு செல்லப் பாடுபடுவேன் என்று உறுதிமொழி கூறி விட்டுத்தான் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இப்படி கோயில் வளரச்சி என்று சொல்லிக் கொண்டு தங்களுக் குள் தனி ராஜ்ஜியம் நடத்திக் கொண் டிருந்தால் இந்திய அரசியலமைப்பு என்பது எதற்காக என்ற கேள்வி எழாதா? தனி ராஜ்ஜியம் நடத்துவதற்கு இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பது எப்படி என்கிற கேள்வி எழாதா? வழிபாட்டுத்தலங்களை மேம் படுத்துவது என்பது இந்துக்களுக்கு வேறு இஸ்லாமியர்களுக்கு வேறா? மதமும் தவறு இறைவழிபாடும் தவறு என்கிறோம் அதில் இந்து என்ன இஸ்லாம் என்ன?

இவ்வாறு கோயில் வளர்ச்சிக்காக ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ஏலம் விட்டது குறித்து இந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில் கோயில் வளர்ச்சிக்கு என்று சொல்லிக் கொள் கிறார்களே கோயிலால் இதுவரை எந்த ஊர் வளர்ச்சி பெற்றிருக்கிறது? அதற்கு  முன் நிற்கும் இவர்கள் இதுவரை கல்வி வளர்ச்சிக்கு என்று ஏதாவது செய் திருக்கிறார்களா? கல்வி வளர்ச்சிக்கு இதுபோல் பல லட்சம் செலவு செய் திருந்தால் இந்தக் கிராமம் கல்விக் கிராமமாக மாறி அத்தனை குடும்பங் களும் அரசு அலுவலர்களின் குடும்பங் களாக மாறியிருக்கும். அதை விட்டு விட்டு பிழைப்பற்றவர்கள் செய்யும் சட்ட விரோதச் செயல்களில் இதுவும் ஒன்று என்றார்.
- ம.மு.கண்ணன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...