Monday, March 9, 2020

ஜனநாயகத்திலிருந்து தூர விலகிப் போகும் இந்தியா: ஆய்வறிக்கை எச்சரிக்கை

நரேந்திர மோடி தலைமையிலான மத் திய பாஜக ஆட்சியில், இந் தியா ஜனநாயகத்திலிருந்து தூர விலகிப் போய்க் கொண் டிருக்கிறது என்று அமெரிக் காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், ‘ஃபிரீடம்அவுஸ்’ எனும் அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. ‘பிரீடம் அவுஸ் ’ அமைப்பா னது, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகளாவிய அரசி யல் மற்றும் உள்நாட்டு உரி மைகளை கண்காணித்து, அத னடிப்படையில் அறிக்கை களை வெளியிட்டு வருகிறது.
1948ஆம் ஆண்டு அய்.நா. பொதுச்சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரி மைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் வழிமுறை களை பின்பற்றி, உலக நாடு களின் அரசியல் உரிமைக ளான, தேர்தல் செயல்முறை, அரசியல் பன்மைவாதம், அர சாங்க செயல்பாடுகள் மற்றும் உள்நாட்டு உரிமைகளான கருத்துச் சுதந்திரம், சட்டத் தின் ஆட்சி, தனிப் பட்ட உரிமைகளை அடிப்படையாக கொண்டு, ‘பிரீடம் அய்வுஸ்’ இந்தஅறிக்கையை தயாரிக் கிறது.அந்த வகையில், 2020-ஆம் ஆண்டுக்கான உலக மக்களின் சுதந்திரம் குறித்த (The Freedom in the World2020) அறிக்கையை ‘ஃபிரீடம் ஹவுஸ்’ நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
இதில், அரசியல் உரிமை கள் வகையில் 40-க்கு 34 புள் ளிகளும், உள்நாட்டு உரிமை கள் வகையில் 60-க்கு 37 புள்ளிகளும் எனமொத்தம் 71 புள்ளிகளே இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 4 புள்ளிகள் குறைவாகும். மேலும் துனி சியா, செனகல் உள்ளிட்ட குறைவான புள்ளிகளை பெற்ற நாடுகளுடன் இணைந்து 83-ஆவது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்தியா வின் இந்த பின்னடைவுக்கு, காஷ்மீர் விவகாரம், குடியுரி மைத் திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, வெகு ஜன ஆர்ப்பாட்டங்கள் மீதான ஒடுக்குமுறை உள்ளிட்ட வையே காரணம் என்று ‘பிரீ டம் ஹவுஸ்’ கூறியுள்ளது.“இந்த புதிய காரணிகள், இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியை அசைத்து பார்ப்பதுடன், அதன் அரசியல் அமைப்பின் மதச்சார்பற்ற தன்மையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி யுள்ளன; இந்தியாவில் கருத் துச் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது, ஊடகவிய லாளர்கள், கல்வியாளர்கள் மற்றும்பலர் அரசியல் ரீதியாக முக்கியமாகஇயங்குபவர்கள் துன்புறுத்தல் களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர்” என்று குறிப் பிட்டுள்ளது.
“உலகின் மிகப்பெரிய ஜன நாயக திருவிழாவான பொதுத் தேர்தலை கடந்த ஆண்டு இந்தியா வெற்றிகரமாக நடத் தியுள்ள நிலையில், நாட்டின் அடிப்படை உறுதிப் பாடான பன்முகத்தன்மை, தனிமனித உரிமைகளில் இருந்து பாஜக தன்னைத் தூர விலக்கிக் கொண்டுள்ளது. பன்முகத் தன்மை, தனிமனித உரிமைகள் இல்லாமல் ஜனநாயகம் நீண்ட காலம் வாழ முடியாது” என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...