அதிகள விலான வராக்கடன், மோச மான நிர்வாகம்
ஆகியவற் றால் பெரும் நிதி நெருக்கடியில் மாட்டிய‘யெஸ்’ (YES) வங்கியின்
நிர்வாகத்தை, இந்திய ரிசர்வ் வங்கியானது (ஆர்பிஅய்) வியாழக்கிழமை யன்று
தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.அடுத்த 30 நாட்களுக்கு, எஸ்பிஅய்யின்
முன்னாள் துணை நிர்வாக இயக்குநர் பிரசாந்த் குமார் தலைமையின் கீழ் ‘யெஸ்’
வங்கி நிர்வாகம் செயல்படும் என்று கூறியதுடன், ‘யெஸ்’ வங்கியின்
வாடிக்கையாளர்கள், அவர்களின்கணக்கிலி ருந்து ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் பணம்
எடுக்க முடியாது என்றுகட்டுப்பாடு ஒன்றையும் விதித் துள்ளது. இது
வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக் கிறது. சாதாரண மற்றும்
நடுத்தர வாடிக்கையாளர்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட பணம்
எடுக்க முடியாத சிக்கலில் மாட்டியுள்ளனர்.
இந்நிலையில்தான், மத் திய ரிசர்வ் வங்கி
ரூ. 50 ஆயி ரம் என்ற கட்டுப்பாட்டை விதிப்பதற்கு சில மணி நேரங் களுக்கு
முன்னதாக, குஜராத் தைச் சேர்ந்த ‘ஸ்பெஷல் பர்பஸ் வெகிகிள்’ நிறுவனம் ஒரே
நாளில் ரூ.265 கோடியை ‘யெஸ்’ வங்கிக் கணக்கிலிருந்து எடுத்திருப்பது
தெரியவந்துள் ளது.குஜராத் மாநிலம் வதோதரா நகரில் ஸ்மார்ட் சிட்டி அமைக்கும்
பணிகளை வதோதரா மாநகராட்சி நிர் வாகம் மேற்கொண்டு வருகி றது. இதில்
‘ஸ்பெஷல் பர்பஸ் வெகிகிள்’ என்ற குஜராத் அரசு நிறுவனம் ஒப்பந்ததா ரராக
உள்ளது. இந்த நிறுவ னத்திற்கு மத்தியஅரசு ரூ. 265 கோடியை அனுப்பியிருந்தது.
‘யெஸ்’ வங்கியில் முதலீடு செய்திருந்த, அந்த பணத்தைத் தான் ‘ஸ்பெஷல்
பர்பஸ் வெகி கிள்’ நிறுவனமானது, ஆர்பி அய்யின் அறிவிப்பு வெளியா வதற்கு சில
மணிநேரங்களுக்கு முன்னதாக எடுத்துள் ளது. இது பலத்த சந்தேகங்களையும்
சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment