2020ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில்
பெண் இயக்குநர் ஒருவருக்குக்கூட விருது அளிக்கப்படவில்லை
கடந்த 92 ஆண்டுகளில் 5 பெண் இயக் குநர்கள் மட்டுமே ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை, அதி லும் ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்.
ஆஸ்கர் நிறுவனத்தால் திரைத்துறையில்
பன்னாட் டளவில் சிறந்தவர்கள் என தேர்வு செய்யப்பட்டு அவர்க ளுக்கு
விருது அளிக்கப்பட்டு வருகிறது. 92ஆவது ஆண் டாக இந்த ஆண்டுக்கான விருது
வழங்கும் விழா அமெரிக்க அய்க்கிய நாட்டில் நடைபெற்றது. பெண் இயக்கு
நர்களின் பெயர் சிறந்த இயக் குநர் பிரிவில் பரிந்துரைக்கப் படாததைக்
கண்டிக்கும் வகை யில், நடாலி போர்ட்மேன் எனும் நடிகை எட்டு பெண்
இயக்குநர்களின் பெயர்க ளையே தனது ஆடையில் தைத்துக் கொண்டு ஆஸ்கர் விருது
விழாவில் பங்கேற்றார்.
இந்த ஆண்டில் சிறந்த இயக்குநர்கள்
பட்டியலில் பெண்கள் இடம் பெற வேண் டும். பெண்களுக்கு உரிய அங் கீகாரம்
அளிக்கப்பட வேண் டும் என்று நான் விரும்பினேன் என்று அவர் குறிப்பிட்டுள்
ளார்.
’ஹஸ்ட்லர்ஸ்’, 'தி ஃபேர் வெல்', 'லிட்டில்
வுமன்', 'எ பியூடிஃபுல் டே இன் தி நெய்பர்வுட்', 'குயின் அண்ட் ஸ்லிம்',
'ஹனி பாய்', 'போர்ட் ரெய்ட் ஆஃப் எ லேடி ஆன் ஃபயர்', 'அட்லாண்டிக்ஸ்' ஆகிய
திரைப்படங்களின் (பெண்) இயக்குநர்களின் பெயர்களை தனது ஆடை யில் தைத்துக்
கொண்டு விழா வில் நாடலி போர்ட்மேன் கலந்துகொண்டார்.
விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில்
இப்படியான விடயங்களை நடாலி போர்ட்மேன் செய்வது இது முதல் முறை அல்ல.
2018-ஆம் ஆண்டு, சிறந்த இயக்குநருக் கான விருது பரிந்துரை பற்றி
அறிவிக்கும் போது, "இதோ இந்த பிரிவில் ஆண் போட்டி யாளர்களின் பெயர்கள்"
என்று குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான
பரிந்துரைப் பட்டியல் அறிவிக்கப்படும் போதே சிறந்த இயக்குநர் பிரி வில்
எந்த பெண் இயக்குநரின் பெயரும் இடம் பெறாமல் இருந்தது கடும் விமர்சனத்
துக்குள்ளானது. ஆனால் இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல. இந்த 92
ஆண்டுகளில் இந்த பிரிவில் இதுவரை அய்ந்தே அய்ந்து பெண் இயக்குநர்கள்தான்
பரிந் துரைக்கப்பட்டுள்ளனர். இதில் 'ஹர்ட் லாக்கர்' பட த்துக்காக கேத்ரின்
பிக்லோ மட்டுமே ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.

No comments:
Post a Comment