தமிழகத்தில் முதல் கட்டமாக, பார்வை குறைபாடுள்ள, 23 ஆயிரத்து, 721 பேருக்கு, 'பிரெய்லி' வாக் காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
பார்வையற்ற வாக்காளர்கள் சிலருக்கு, கடந்த
லோக்சபா தேர்தலின்போது, சோதனை முறையில், 'பிரெய்லி' அடை யாள அட்டை
வழங்கப்பட்டது.இந்நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், சேலம், கோவை,
நீலகிரி, திருப்பூர், திருச்சி உட்பட, 20 மாவட்டங்களுக்கு, 'பிரெய்லி' அடை
யாள அட்டைகள், இரு தினங்களுக்கு முன் அனுப்பப்பட்டன.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறிய
தாவது:முன்பக்கத்தில் அடையாள அட்டை எண், பெயர், வயது, பிறந்த தேதி ஆகி யவை,
'பிரெய்லி' முறையில் இருக்கும். பின்பக்கம், சட்டசபை தொகுதி, பாகம் எண்
இடம்பெற்று உள்ளன.
முதல் கட்டமாக, பார்வை குறை பாடுள்ள, 23
ஆயிரத்து, 721 பேருக்கு, 'பிரெய்லி' வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட
உள்ளது. விரைவில், வீடு வீடாக சென்று, அடையாள அட்டைகள் வினியோகம்
செய்யப்படும்.ஏற்கனவே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், வரிசை எண்,
'பிரெய்லி' முறையில் இடம்பெற்றுள்ளது.
தேர்தலின் போது, 'பிரெய்லி பேலட் சீட்'
தயாரிக்கப்படும்.மாற்றுத்திறனாளிகள், பிறர் உதவியின்றி, தாங்களாகவே,
வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவற்றை பார்த்து, ஓட்டுப்பதிவு செய்ய, சிறப்பு
பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment