Wednesday, January 8, 2020

பெண் துப்புரவு தொழிலாளி ஊராட்சித் தலைவராக பதவியேற்றார்


விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரம் ஊராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றியவர் சரஸ்வதி. இவர் சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, கான்சாபுரம் ஊராட்சித் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டார். இவருக்கு ஊராட்சி அலுவலகத்தில், தேர்தல் அலு வலர் சுரேஷ் நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் தலைவருக்கான பதிவேட்டில் கையெழுத்திட்டு, பொறுப் பேற்றுக் கொண்டார். பதவியேற்றபின் சரஸ்வதி கூறுகையில், ‘‘ஊராட்சி யில் தெருக்களை தூய்மையாக வைத்திருக்கவும், கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்கவும் நடவடிக்கை எடுப்பேன். முறையான குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் எரிய வைக்க நடவடிக்கை எடுப்பேன். ஊருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன்’’ என்றார். தலைவராக பதவியேற்ற சரஸ்வதிக்கு, அவரது கணவர் குருசாமி மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...