ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், 50 சதவீத பெண்கள், மக்கள் பிரதிநிதிகளாக நேற்று பொறுப்பேற்றனர்.
தமிழகத்தில் ஊரகம், நகர்புறம் என, இரண்டு
வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இந்த பதவிகளில், மூன்றில் ஒரு பங்கு,
பெண்க ளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை, 50 சதவீதமாக உயர்த்தும்
அறிவிப்பை, 2016இல், முதல்வராக இருந்த ஜெயலலிதா வெளியிட்டார். அதே ஆண்டு,
பிப்., மாதம், சட்டசபையில், இது தொடர்பான சட்டமும் இயற்றப்பட்டது. இந்த
புதிய சட்டத்தின் படி, 2016 அக்டோபரில், உள்ளாட்சி தேர்தல் நடத்த
ஏற்பாடுகள் நடந்தன. தி.மு.க., தொடர்ந்த வழக்கு காரணமாக, தேர்தல் ரத்து
செய்யப்பட்டது. அதன்பின், மூன்று ஆண்டுகளாக, தேர்தல் நடத்தப்படவில்லை.
வார்டு வரையறை சமீபத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 27 மாவட்டங்களில்
உள்ள, 91 ஆயிரத்து, 975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டும், தேர்தல் நடத்தி
முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பெண்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு
அளித்து, வார்டுகள் வரையறை செய்யப்பட்டன.
மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி,
27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்பு நேற்று நடந்தது.
இதில், வெற்றிப் பெற்ற, 50 சதவீத பெண்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளாக
பொறுப்பேற்றனர். இவர்களில், 20 வயது முதல், 70 வயதுக்கு மேற்பட்டோரும்
அடக்கம். புதிதாக பொறுப்பேற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு, அரசியல் கட்சி
நிர்வாகிகள், பொது மக்கள், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து
தெரிவித்தனர். தமிழக உள்ளாட்சி அமைப்புகளில், முதல் முறையாக, 50 சதவீதம்
பெண்கள் பொறுப் பேற்றுள்ளனர். இவர்களின் பதவிக்காலம், 2025ஆம் ஆண்டு இறுதி
வரை நீடிக்கும்.
No comments:
Post a Comment