Wednesday, January 8, 2020

வருமானவரி கணக்கு தாக்கல்: புதிய மாற்றம்

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற் கான படிவங்களை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதலாம் வாரத்தில் வருமான வரித்துறை வெளியிடுவது வழக்கம். ஆனால், அதற்கு மாறாக, கடந்த 3-ஆம் தேதி, 2020_2021 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.
அவற்றில் ஒன்று அய்.டி.ஆர்.-1 சஹாஜ் படிவம். ரூ.50 லட் சம்வரை ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர்கள் இதில் கணக்கு தாக்கல் செய்யலாம். மற்றொன்று, அய்.டி.ஆர்.-4 சுகம் படிவம். இது, தனிநபர் கள், இந்து கூட்டு குடும்பங்கள், ரூ.50 லட்சம்வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள், வர்த் தகம் மற்றும் தொழில் மூலம் வருவாய் ஈட்டுபவர்கள் ஆகி யோர் பயன்படுத்தக்கூடியது.
அத்துடன், இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களில் 2 பெரிய மாற்றங்கள் செய்துள்ளதாக வருமான வரித்துறையின் அறிவிப்பாணையில் கூறப் பட்டுள்ளது.
அதாவது, 2 அல்லது அதற்கு மேற்பட்டோரை பங்குதாரர்களாக கொண்டு சொந்த வீடு வைத்திருக்கும் தனிநபர்கள் மேற்கண்ட 2 படிவங்களையும் பயன்படுத்த முடியாது. அவர்களுக்கு தனி படிவம் அறிமுகம் ஆகிறது. உரிய நேரத்தில், அந்த படிவம் வெளியிடப்படும்.
2-ஆவது மாற்றம், ரூ.1 கோடிக்கு மேல் வங்கிக்கணக் கில் போட்டு வைத்திருக்கும் தனிநபர்கள், வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு ஆண் டுக்கு ரூ.2 லட்சம் செலவழித் தவர்கள், மின்சார கட்டணம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கட்டி யவர்கள் ஆகியோரும் அய். டி.ஆர்.-1 படிவத்தை பயன் படுத்த முடியாது.
அறிமுகப்படுத்தப்பட உள்ள தனி படிவத்திலேயே அவர்கள் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று வரு மான வரித்துறை அறிவிப்பா ணையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...