2014-ஆம் ஆண்டு, மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதலே, நாட்டின் வேலைவாய்ப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
குறிப்பாக, 2016-இல் பிரத மர் மோடி
கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம், 2017-இல் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி
வரிவிதிப்பு ஆகியவை நாட் டின் சிறு,குறு மற்றும் நடுத் தரத் தொழில்கள்
துவங்கி, ஒட்டுமொத்த தொழிற்துறை களையும் அழித்துவிட்டது. சுமார் 1
கோடிக்கும் அதிகமா னோர் வேலையை இழந்து நடுத் தெருவிற்கு வந்து விட் டனர்.
தற்போதுவரை, புதிய வேலைவாய்ப்புக்களும்
உரு வாகவில்லை.இதனால், வேலையில்லாமல் இருக்கும் மக்களின் எண்ணிக்கையும்,
உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாத ஊழியர்களும் நாட் டில் அதிகரித்துக் கொண்டே
போகின்றனர். 2019ஆம் ஆண்டில் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிப் பொறுப் பேற்ற
பின்னர், வேலை உரு வாக்கத்தில் அதிகக் கவனம் செலுத்தப்படும் என்று பாஜக
உறுதியளித்தது. ஆனால் ஒவ்வொருமாதமும் வேலையின்மைதான் அதிகரித்துக் கொண்டே
செல்கிறது.இதற்கு, மத்திய அரசின் ஆலோசனை அமைப்பான இந்தியப் பொரு ளாதாரக்
கண்காணிப்பு மய்யம்(Centre for Monitoring Indian Economy-CMIE)
வெளியிட்டுள்ள அறிக் கையே சான்றாகி உள்ளது.
டிசம்பர் மாதத்தில் இந் தியாவின்
வேலையின்மை விகிதம் 7.7 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாக இந்திய பொருளாதார
கண்காணிப்பு மய்யம் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம்
7.48 சதவிகித மாக இருந்த நிலையில், அதைக்காட்டிலும் வேலையின்மை தற்போது
அதிகரித் துள்ளதாக கூறியுள்ளது.நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம்
நவம்பர் மாதத்தில் 8.81 சதவிகிதமாக இருந்த நிலையில், டிசம்பர் மாதத்தில்
அது 8.89 சதவிகித மாக அதிகரித்துள்ளது. அதே போல, கிராமப்புறங்களில் நவம்பர்
மாதத்தில் 6.82 சத விகிதமாக இருந்த வேலையின்மை விகிதம், டிசம்பர்
மாதத்தில் 7.13 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, வேலையின்மை
விகிதம் மிக அதிக மாக உள்ள இந்தியாவின் 10 மாநிலங்களில் 6 மாநிலங்கள் பாஜக
ஆளும் மாநிலங்களா கவோ அல்லது பாஜக கூட் டணி ஆட்சியில் இருக்கும்
மாநிலங்களாகவோ இருப்ப தையும், இந்தியப் பொருளா தாரக் கண்காணிப்பு மய்யத்
தின் அறிக்கை அம்பலப்படுத் தியுள்ளது.
No comments:
Post a Comment