Monday, January 6, 2020

மருத்துவக் கல்லூரிகளின் 1000 பேராசிரியர்கள் கூண்டோடு பதவி விலகல்; நோயாளிகள் அவதி

மத்தியப்பிரதேச மருத்துவக் கல்லூரி களின் பேராசிரியர்கள் கூண்டோடு பதவி விலகியுள்ளதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
7 வது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியம் மற்றும் சலுகைகளில் உள்ள முரண்பாடுகளை நிவர்த்தி செய்யக்கோரி மத்திய பிரதேச மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.   மாநில அரசு அவர்களது கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. தங்களது கோரிக் கைகள் ஏற்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய பிரதேச அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் ஆயிரம் பேர் கூண்டோடு பதவி விலகியுள்ளனர்.   பதவி விலகல் முடிவை அறிவித்துள்ள மருத்துவ பேராசிரியர்கள்  ஜனவரி 9 முதல் டூட்டி அறிக்கை அளிக்க மாட்டார்கள் என்று மத்திய மருத்துவ ஆசிரியர் சங்கத்தின் மாநில பிரிவு செயலாளர் டாக்டர் ராகேஷ் மால்வியா தெரிவித்தார். மற்ற கல்லூரிகளில் இருந்து மீதமுள்ள 2,300 ஆசிரியர்கள் வெள்ளிக் கிழமைக்குள் பதவி விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்து உள்ளார்.
இதனால் 13 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் நிலை மை கேள்விக்குறியாகி உள்ளது. இதில் காந்தி மருத்துவக் கல்லூரியுடன் இயங்கி வரும் ஹமதியா மருத்துவமனையில் மட்டுமே நாள் ஒன்றுக்கு சுமார் 3,500 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...