Sunday, December 8, 2019

தமிழக அரசின் கஜானா காலியாகும் நிலை உள்ளது தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை


தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியதாவது:-
“ஜி.எஸ்.டி சட்டத்தைச் செயல்படுத்திய தால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப் பீட்டுத் தொகை குறித்த தனது வாக்குறுதி யையும், சட்டத்தையும் மீறியுள்ள மத்திய பா.ஜ.க. அரசின் மீது வழக்குத் தொடர்ந் தாவது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டும்”
“தமிழகத்தின் நிதிநிலைமை மோச மாகிக் கொண்டிருக்கும் நிலையில், கஜானாவைக் காலி செய்து விட்டுப் போக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்திருக்கிறது”
“சரக்கு மற்றும் சேவை வரிச் சட் டத்தைச் செயல்படுத்தியதன் தொடர்ச்சி யாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப் பீட்டுத் தொகையை போதிய ஜி.எஸ்.டி. வருவாய் இல்லாததால் வழங்க முடியாது” என்று மத்திய பா.ஜ.க. அரசு கைவிரித்துள்ளதை, அ.தி.மு.க. அரசும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், நிதியமைச்சராகவும் துணை முதலமைச் சராகவும் இருக்கும் ஓ. பன்னீர் செல்வமும் கண்டு கொள்ளாமல் இருப் பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் உயிருடன் இருந்தவரை எதிர்த்த இந்த ஜி.எஸ்.டி சட்டத்தை, பின்னர் ஆதரித்த முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி, பாராளுமன்ற மய்ய மண்டபத்தில் 30.6.2017 நள்ளிரவில் நடைபெற்ற “ஜி.எஸ்.டி சட்ட துவக்க விழா”விற்கு அன்றைய நிதியமைச்சர் ஜெயக்குமாரை அனுப்பி வைத்தார். இந்தச் சட்டம் அமலுக்கு வந்த மறுநாள், “இது வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய வரி விதிப்பு முறை” என்று அ.தி.மு.க. அரசு செய்திக்குறிப்பே வெளியிட்டு மகிழ்ச்சி யடைந்தது.
ஜி.எஸ்.டி சட்டத்தினை தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்பு வைத்து நிறை வேற்ற முனையும் போது அ.தி.மு.க. எப்படி இந்த மசோதாவை முதலில் எதிர்த்தது என்ற விவரங்களை எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் விளக்கிக் கூறி “வணிகர்களை, மாநில நிதி உரிமையைப் பாதிக்கும் இந்த சட்டத்தை அவசரகோலத்தில் நிறைவேற்ற வேண் டாம். தேர்வுக் கமிட்டிக்கு அனுப்புங்கள்” என்று எவ்வளவோ வலியுறுத்திக் கேட் டேன். எனது கோரிக்கையை நிராகரித்து விட்டு, அன்றைக்கு ஜி.எஸ்.டி. சட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு ஒப்புதல் அளித்தது.
ஆனால் ஜி.எஸ்.டி. சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் 9,270 கோடி ரூபாய் இழப்பீடு பற்றி அ.தி.மு.க. அரசு சிறிதும் அக்கறை காட்டவில்லை. பிறகு, 2019_-20ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் “ஜி.எஸ்.டி மற்றும் இழப்பீடு வகையில் சுமார் 5,909 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ளது” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது டில்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநி லங்களைச் சார்ந்த நிதியமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள், “ஆகஸ்ட், செப் டம்பர் மாதம் வரையிலான இழப்பீட்டுத் தொகையை விடுவிக்கக் கோரியும்” மத்திய நிதியமைச்சரைச் சந்தித்து முறையிட் டுள்ளார்கள்.
அவர்களுடனும் தமிழக அரசின் நிதியமைச்சர் செல்லவில்லை. ஒருவேளை மத்திய பா.ஜ.க. அரசு தங்கள் மீது கோபம் கொண்டால் என்ன செய்வது என்ற பயமோ என்னவோ! எதற்கெடுத்தாலும் வழக்கமாக கடிதம் மட்டும் எழுதும் முதலமைச்சர் பழனிசாமியும் இது குறித்து மவுனமாகவே இருக்கிறார்.
“ஆட்சியில் இருக்கப் போவது இதுவே கடைசி முறை. ஆகவே நாம் எதற்காக மாநில அரசின் நிதி உரிமைக்காக மத்திய அரசுடன் மோதி, கடனாகப் பெற்ற பதவிக்கு ஆபத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்” என்ற அச்சத்தில், மாநில நிதி தன்னாட்சி உரிமையை ஒட்டுமொத்தமாக கொடுத்து விட்டு அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அ.தி.மு.க. ஆட்சியின் மோசமான நிதி மேலாண்மையால், 3 லட்சத்து 97 ஆயி ரத்து 496 கோடி ரூபாய் கடன் வலையில் சிக்கி, மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழகத் தின் நிதி நிலைமையில், “ஜி.எஸ்.டி இழப் பீட்டையும்” சுமையாக ஏற்றி வைத்து கஜானாவை காலி செய்து விட்டுப் போக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்திருக்கிறது.
ஆகவே, மத்திய அரசிடமிருந்து ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையைப் பெறுவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். “மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படும்” என்ற வாக்குறுதியையும், சட்டத்தையும் மீறியுள்ள மத்திய பா.ஜ.க. அரசின் மீது வழக்குத் தொடர்ந்தாவது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட் டிடவும் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிடவும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இதில் தொடர்ந்து எவ்வித நட வடிக்கையுமின்றி அமைதி காப்பது, மாநிலத்திற்கு மேலும் சில பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்க விரும்பு கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...