திருநங்கையாக மாறிய இவர், கோவையில் உள்ள ரஷ்யா, அம்மு என்ற திருநங்கைகளிடம் அடைக்கலம் புகுந்தார்.
தீப்தியை மகளாக ரஷ்யா ஏற்றுக்
கொண்டுள்ளார். அம்மு பேத்தியாக தீப்தியை ஏற்றுக் கொண்டுள்ளார். பிறகு,
தீப்தியை மூன்று ஆண்டுகள் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில்
படிக்க வைத்துள்ளனர். இந்நிலையில், தீப்தியின் தாய் மாலதியும், அவரை
ஏற்றுக்கொண்ட நிலையில், தந்தை யின் வாரிசு வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.
இதற்கு அவரது தாயார் தடையில்லா சான்று அளித்துள்ளார். தற் போது, தீப்திக்கு
ஊட்டியில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி
வழங்கப்பட்டுள் ளது. நேற்று இவர் முறைப்படி இந்த பணியில் சேர்ந்துள்ளார்.
மிகவும் சிரமப்பட்டு படித்து முடித்த தீப்தி, தமிழகத்தில் வனத்துறை
அலுவலகத்தில் பணியில் சேரும் முதல் திருநங்கை தீப்தி என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment