Friday, December 6, 2019

ஜெர்மனி அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர் அய்ம்பொன் சிலைகள்


அய்ரோப்பிய தமிழர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஜெர்மனி யின் பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்தின் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள ‘லிண்டன்’ அரசு அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் 2 அய்ம் பொன் சிலைகள் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் நிறு வப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பிரெட ரிக் காமரர், கார்ல் கிரவுல் ஆகியோரால் ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப் பட்ட திருக்குறள் புத்தகம் மற்றும் தமிழக ஆய்வாளர் கவுதம சன்னா எழுதிய ‘திரு வள்ளுவர் யார் - கட்டுக் கதை களை கட்டுடைக்கும் திரு வள்ளுவர்’ என்னும் புத்தக மும், தமிழ் மரபு அறக்கட் டளையின் சார்பில் கதிரவன் உருவாக்கிய குழந்தைகளுக் கான திருக்குறள் மென்பொரு ளும், விழா மலரும் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவள வன், ‘லிண்டன்’ அருங்காட்சி யக இயக்குனர் இனெஸ் டி கெஸ்ட்ரோ, தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் க.சுபாசிணி, எழுத்தாளர் கவு தம சன்னா உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...