Friday, December 6, 2019

பட்னவிஸ் சிக்குகிறார்


மராட்டிய மாநில முன் னாள் முதல்வர் தேவேந் திர பட்னவிஸ், தன் மீதான குற்றவியல் வழக்கு விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் மறைத்த வழக்கு விசார ணையை, புனே நீதிவான் நீதிமன்றம், ஜன., 4க்கு தள்ளி வைத்தது.பட்னவிஸ் மீது, 1996 மற்றும் 1998இல், ஏமாற்றுதல் மற்றும் மோசடி பிரிவு களில், இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதை, பட்னவிஸ், நாக்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போது, தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்காமல் மறைத்ததாக, வழக்குரைஞர் சதிஷ் உகே, நாக்பூர் நீதிவான் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடியானது.
இதைத் தொடர்ந்து, சதிஷ் உகே, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரரின் புகாருக்கு அடிப்படை ஆதாரமிருப்பதாக கூறி, வழக்கை விசாரிக்குமாறு, நாக்பூர் நீதிவான் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக, பட்னவிசின் நாக்பூர் வீட்டிற்கு, கடந்த வாரம், 'அழைப்பாணை' அனுப்பப்பட்டது.இந்நிலையில், நேற்று முந்நாள், நாக்பூர் நீதிவான் நீதிமன்றத்தில், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பட்னவிஸ் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் உதய் தாப்லே, ''தவிர்க்க முடியாத காரணங்களால், பட்னவிஸ் நேரில் வர முடியவில்லை; இவ்வழக்கில், அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்,'' என கேட்டுக் கொண்டார்.
பிடிஆணை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சதிஷ் உகே, ''நேரில் ஆஜராகக் கூடாது என, பட்னவிஸ் முடிவெடுத் துள்ளார்; 'அவர் ஆஜராக தேவையில்லை' என, அவரது வழக்குரைஞர், நவ., 4இல் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறினார். ஆகவே, திட்டமிட்டு நீதிமன்றத் திற்கு வராத பட்னவிசுக்கு, பிடி ஆணை பிறப்பிக்க வேண்டும் 'என, வலியுறுத்தினார். இரு தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதி எஸ்.டி.மேதா, வழக்கு விசாரணையை, ஜன.4க்கு தள்ளி வைத்தார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...