அசாமில் இன்று முழு அடைப்புப் போராட்டம்
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ் தான்
ஆகிய நாடுகளில் இருந்து மத பாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில்
குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்க
வகை செய்யும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறை
வேற்றப்பட்டது.
மாநிலங்களவையில் தாக்கல்
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும்
எதிர்ப்பு தெரிவித்தன. எனி னும், மக்களவையில் பாஜகவுக்கு
தனிப்பெரும்பான்மை இருந்ததால் மசோதா சிக்கல் இன்றி நிறைவேறியது. இதை
யடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல்
செய்யப்பட்டது.
இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்த
மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வட கிழக்கு மாணவர் சங்கம் மற்றும்
அனைத்து அசாம் மாணவர் சங்கம் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்
நடைபெறு கிறது. இதனால் கவுகாத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் கடைகள்
அடைக்கப் பட்டுள்ளன. வாகனங்கள் இயக்கப்படவில்லை. இத னால் சாலைகள் வெறிச்
சோடி காணப்படுகின்றன. மாணவர் அமைப்பினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர்.
அனைத்து அசாம் மாண வர் சங்கத்தினர்
திப்ருகர், ஜோர்பத் பகுதிகளில் ஆர்ப் பாட்டம் நடத்தினர். அப் போது
சாலைகளில் டயர் களை கொளுத்தியதால் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
குடியுரிமைச் சட்டம்
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு குடியுரிமைச் சட்டம் (என்.ஆர்.சி.) - 1955இல் திருத்தம் கொண்டுவர அமைச் சரவை 6.12.2019 வியாழன் அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப் பட்டது. இந்த சட்டத்திருத்தமானது பாகிஸ்தான், ஆப்கா னிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளிலிருந்து இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தினர் - இந்து, சீக்கியர், பவுத்தர், ஜெயின், கிறித்தவர் இந்தியாவில் சட்ட விரோதமாகக் குடியேறியிருந்தால் அவர்களுக்கு குடியுரிமை கொடுப்பது என்று சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
அசாம் மாநிலத்தில் சமீபத்தில்
நடத்தப்பட்ட தேசிய குடி மக்கள் பதிவேட்டில் சுமார் 19 இலட்சம் மக்கள்
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்ற பட்டியலில் இருப்பதை இந்த சட்டத்
திருத்தத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. வங்க தேசத்தை சேர்ந்த
இஸ்லாமியர்கள் குடியுரிமைப் பதிவேட்டில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று
எதிர்பார்த்தது மோடி அரசு.
ஆனால் இதில் பெரும் எண்ணிக்கையில்
இந்துக்கள் இருப்பதால் அதனை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்நாட்டில் இருந்து
ஒவ்வொரு ஊடுருவல்காரர்களையும் வெளியேற்றுவோம் என்று முழங்கினார். அசாமைப்
போன்று இந்துக்கள் இதில் பாதிப்பு அடையக்கூடாது என்பதால் குடியுரிமைச்
சட்டத்திருத்தம் கொண்டு வருவோம் என்று தெரிவித்தார். நாடாளுமன்றக்
கூட்டத்தொடரின் முதல் நாளில் இந்தியா முழுவதும் தேசிய குடிமக்கள்
பதிவேட்டினை மேற்கொள்வோம் என்றும் தெரிவித்து இருந்தார் அமித்ஷா.
மத்திய அரசு 130 கோடி மக்களிடையே
சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அடையாளம் காண நிறைய பணத்தையும் நேரத்தையும்
விரயம் செய்ய விழைகிறது. ஆனால் இந்தியாவில் சட்ட விரோதமாக நிறைய மக்கள்
குடியேறி உள்ளனர் என்றோ, அவர்களால் நிறைய பிரச்சினைகள் மேலெழுந்து உள்ளது
என்றோ இன்னும் ஆதாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் முன் வைக்கவில்லை.
கண்டிப்பாக இந்தியாவில் சட்ட விரோதமாகக்
குடியேறி யவர்கள் உள்ளனர். அநேக நாடுகளில் இதே நிலைமை தான். ஆனால் இந்த
தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் இவர் களை அடையாளம் காண நினைப்பதென்பது
எளிதான ஒன்றல்ல.
இவர்களை அடையாளம் காண ஒவ்வொரு இந்தியனின் வம்சா வழியினையும் சரி பார்ப்பதென்பது நடைமுறைக்கு சாத்தியமான ஒன்று இல்லை.
குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை
ஒருவர் நிரபராதி என்பது தான் இயற்கையின் நியதி. ஆனால் என்.ஆர்.சி.யை
பொறுத்தவரை ஒவ்வொரு இந்தியனும் தனது குடியுரிமையை நிரூபிக்கும் வரை
சட்டவிரோதமாகக் குடியேறியவர் என்றே கருதப்படுவர். அசாமில் மட்டும்,
என்.ஆர்.சி.க்காக ரூ.1220 கோடி செலவாகியுள்ளது. இதன்படி கணக்கிட்டால்,
இந்தியா முழுமைக் கும் என்.ஆர்.சி.க்காக ரூ.2 லட்சம் கோடிக்கு மேல்
செலவாகும்.
நூற்றாண்டு காலமாக வெளிநாடுகளில் இருந்து
இந்தியா விற்குள் குடியேறிய வறிய மக்களால் இந்திய பாதுகாப்புக்கும்,
இறையாண்மைக்கும் இதுவரை எந்த அச்சுறுத்தலும் இல்லை. நாட்டின்
சமூகக்கட்டமைப்பில் எந்த ஒரு சிக்கலும் இல்லாத நிலைதான் இன்றுவரை உள்ளது.
என்.ஆர்.சி. மூலமாக அடையாளம்
காணப்படுபவர்களை வங்க தேசத்திற்கு நாடு கடத்த மாட்டோம் என்று ஏற்கெனவே வங்க
தேசத்திற்கு இந்தியா வாக்குறுதி அளித்துள்ளது. அப்படி இருக்கும்
பட்சத்தில், சட்ட விரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டுபிடிக்க அரசு ஏன்
இவ்வளவு ஆர்வமாக உள்ளது? இதில் இருந்தே அரசுக்கு இதில் உள் நோக்கம் உள்ளது
என்பது தெளிவாகிறது.
உண்மையில் இந்தியா முழுவதும் இந்துத்துவ
சக்திகளுக்கு எதிராக உள்ளவர்களை அலைக்கழித்து பழிவாங்கும் நோக்கத் தோடுதான்
இந்தச் சட்டத்தை மத்திய அரசு கையிலெடுத்தது என்பது அமித்ஷாவின்
மேற்குவங்க உரையிலிருந்தே தெளிவாகியுள்ளது.
இப்பொழுது இந்தியாவிற்குள் ஒரு முக்கிய
பிரச்சினை கிளர்ந்து நிற்கிறது. வட மாநிலங்களிலிருந்து தென் மாநிலங்
களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்குக் குடியேறும் மக்கள் நாளும் நாளும்
அதிகரித்து வருகின்றனர். வடக்கே இருந்து வரும் இரயில்கள்மூலம் மத்திய
சென்ட்ரல் இரயில் நிலையத்தில், நாளும் வந்து குவிந்து கொண்டே உள்ளனர்.
வடமாநிலத்து இளைஞர்களால் தமிழ்நாட்டில் பல
விரும்பத் தகாத நிகழ்வுகள் நடந்து கொண்டும் உள்ளன. என்னதான் தேசியம்
பற்றி உரக்கப் பேசினாலும் வாயும் வயிறும் வேறுதான்; மண்ணின்
மைந்தர்களுக்கான வேலை வாய்ப்புகள் பறிப் போய்க் கொண்டுள்ளன.
தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஒரு பக்கத்தில் இந்தப் பிரச்சினை நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது.
ஒரே ரேஷன் கார்டு என்பதுகூட வடபுலத்திலிருந்து குடி பெயருவோருக்காக செய்யப்படும் ஏற்பாடு என்று கருதுவதற்கும் இடம் இருக்கிறது.
இதையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே நமது அழுத்தமான வேண்டுகோள்!
No comments:
Post a Comment