அமெரிக்க மத சுதந்திர ஆணையம் எச்சரிக்கை
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவையிலும்
குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், பிரதமர் மோடி, அமித்ஷா
வுக்கு தடை விதிக்கும்படி அமெரிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என
அமெரிக்காவைச் சேர்ந்த, ‘சர்வதேச மத சுதந்திர ஆணையம்’ எச்சரித் துள்ளது.
திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா
மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட
உள்ளது. மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் இந்த சட்ட திருத்தத்திற்கு
வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில்,
அமெரிக்காவின் ‘சர்வதேச மத சுதந்திர ஆணையம்’ மத்திய அரசுக்கு எச்சரிக்கை
விடுத் துள்ளது.
அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா தவறான திசையில் எடுக்கப்பட்ட பயங்கரமான திருப்பமாகும்.
இது, சட்டத்தின் முன் அனைவரும் சமம்
என்பதை உறுதிப்படுத்தும் இந்திய அரசியல் சாசனத்திற்கும், மதச்சார்பற்ற
இந்தியாவின் புகழ் பெற்ற வரலாற் றுக்கும் எதிரானது. இந்த மசோதா
மதப்பாகுபாட்டை உருவாக்கக் கூடியது. தனது நாட்டு குடிமகன்களுக்கு இந்திய
அரசு மதச் சோதனையை நடத்துகிறது. குடி யுரிமை மசோதாவால் பல முஸ்லிம்கள்
பாதிக்கப் படுவார்கள். எனவே, நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் திருத்தப்பட்ட
குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
மற்றும் பிற தலைமை பொறுப்பில் இருப்பவர்கள்மீது தடை விதிப்பு நடவடிக்கையை
அமெரிக்க அரசு மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அமித்ஷாவின் பெயரை நேரடியாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இந்த ஆணையம்,
‘பிற தலைமை பொறுப்பில் இருப்பவர்கள்’ என்ற வாசகத்தின் மூலம் பிரதமர்
மோடியின் பெயரை மறைமுகமாக சுட்டிக்காட் டியுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
மோடிக்கு விசா வழங்க கூடாது என்றதும் இதுதான்
கடந்த 1998 இல் உருவாக்கப்பட்ட
அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம், வெளிநாடுகளில் நடக்கும் மத
சுதந்திர விதிமீறல்களை ஆய்வு செய்து, அதற்கான பரிந்துரைகளை அமெரிக்க
அதிபர், வெளியுறவுத் துறை மற்றும் அமெரிக்க நாடாளு மன்றத்திற்கு வழங்கும்.
கடந்த 2002இல் கோத்ரா வன்முறையை தொடர்ந்து, அப்போதைய குஜராத் முதல்வரான
நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட வேண்டும் என 2005இல்
பரிந்துரைத்தது இந்த ஆணையம்தான்.
No comments:
Post a Comment