Thursday, December 19, 2019

ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது


இந்தியா கட் டமைப்பு சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும் என பன்னாட்டு நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கீதா கோபி நாத் மேலும் கூறியுள்ளதாவது:
உள்நாட்டு தேவையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை கையாளும் வகையிலும், உற் பத்தி வளர்ச்சியை ஊக்கு விக்கும் விதத்திலும், நடுத்தர வேலைவாய்ப்புகளை உரு வாக்க ஆதரவளிக்கும் வகையிலான கொள்கைகளை உருவாக்குவதில் அதிக முக்கி யத்துவம் கொடுத்து இந்திய அரசு செயல்பட வேண்டும்.
ஆறு ஆண்டுகளில் இல் லாத அளவுக்கு பொருளா தார வளர்ச்சி குறைந்துள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு தேவையை ஊக் குவிக்கும் விதத்தில் வங்கி மற்றும் தொழிலாளர் சீர்தி ருத்தம் உள்ளிட்ட நாட்டின் கட்டமைப்பு துறைகளில் உரிய மாற்றங்களை ஏற்படுத் துவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
மேலும், பரந்த அடிப் படையிலான வளர்ச்சியைப் பெறுவதற்கு கல்வி, சுகாதா ரம் ஆகியவற்றை மேம்ப டுத்துவது அத்தியாவசியமான தாகும் என்றார் அவர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...