இங்கிலாந் தில் வசிக்கும் இந்திய வம்சா வளிப் பெண் ஒருவர் சிறு நீரகத்தை கொடையளித்து குழந்தையின் உயிரை காப் பாற்றியுள்ளார்.
இங்கிலாந்தில் வசிக்கும் அம்ரிக் கண்டோலா
மற்றும் ஜோட்டி இணையருக்கு குறைப் பிரசவரத்தில் பெண் குழந்தை பிறந்தது.
அதற்கு அனயா கணடோலா என பெயரிடப்பட்டது. அந்த குழந்தைக்கு ஒருவித நோய்
காரணமாக சிறுநீரகம், ஈரல் ஆகியவை பெரிதாக இருந் தது. நுரையீரல்கள் வளர்ச்சி
யடையாமல் இருந்தன. இதய பாதிப்பும் இருந்தது. அந்த குழந்தையின் சிறுநீரகம்
பெரி தாகி 1.5 கிலோ எடையுடன் காணப்பட்டது. இதனால் அந்த சிறுநீரகங்கள்
அகற்றப் பட்டன. இதன் காரணமாக 10 முதல் 12 மணி நேரத்துக்கு ஒரு முறை அந்த
குழந்தைகள் டையாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது.
சிறுநீரக மாற்று சிகிச்சை
மேற்கொண்டால்தான் அந்த குழந்தை இயல்பாக வாழ முடியும். இதற்காக சமூக
இணையதளத்தில் ‘ஹோப் பார் அனயா’ என்ற பெயரில் ஹேஸ்டேக் உருவாக்கப் பட்டு
பிரசாரம் மேற்கொள் ளப்பட்டது. இதையறிந்த இந் திய வம்சாவளியைச் சேர்ந்த
ரேடியோகிராபர், சுரேந்தர் சபால் (36) சிறுநீரகத்தை கொடையாக அளிக்க முன்
வந்தார். இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த இவரது சிறு நீரகம் மாற்று அறுவை
சிகிச் சைக்கு பொருத்தமான தேர் வாக அமைந்தது. அதன்படி சபாலின் சிறுநீரகம்
அனயா வுக்கு பொருத்தப்பட்டது. இதுகுறித்து அனயாவின் தந்தை அம்ரிக்
கூறுகையில், ‘சூப்பர் ஹீரோக்கள் உண்மை யானவர்கள் அல்ல என கூறு கிறார்கள்.
ஆனால் உண்மை யான சூப்பர் ஹீரோ எங்க ளுக்கு கிடைத்துள்ளார்’’ என சுரேந்தர்
சபால் பற்றி பெரு மையாக கூறினார்.
No comments:
Post a Comment