ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் வரி
விகிதம் மூன்றடுக்காக மாற்றப்படுகிறது எனவும், இதனால் அத்தியாவசியப்
பொருட்கள் உள்ளிட்ட பல பொருட் களின் விலை அதிகரிக்கும் என்றும் பொருளாதார
நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. வரி
அமலாக்கம் செய்யப்பட்டபோது நான்கடுக்கு வரி விகிதம் இருந்தது. இவை 5%,
12%, 18% மற்றும் 28% ஆகும். அதன் பிறகு ஒரு சில பொருட்களுக்கு வரி
விலக்கு வழங்கப்பட்டது. பல பொருட்கள் குறைந்த வரி விகிதத்துக்கு
மாற்றப்பட்டன. அத்துடன் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கான வரம்பும்
அதிகரிக்கப்பட்டது.
சமீப காலமாக ஜி.எஸ்.டி. வருவாய்
பெருமளவில் குறைந்து வருகிறது. தற்போது மத்திய நிதித்துறை துணை அமைச்சர்
வெளியிட்ட தகவலின்படி கடந்த ஆறு மாதங்களில் எதிர்பார்த்ததை விட
ஜி.எஸ்.டி. வருமானம் 40% குறைந்துள்ளது
தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத்
தொகையை மத்திய அரசு வருமானம் குறைவால் நிறுத்தி வைத்துள்ளது. ரூ.5,26,000
கோடி வருமானம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வந்ததோ ரூ.3,28,356 கோடி
தானாம். 2017 ஜூலை ஒன்று முதல் ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டது. 'ஒரே
நாடு, ஒரே வரி' என செயல்படுத்தப்பட்ட இந்த வரி விகிதத்தில் பாதி
மாநிலங்களுக்கும், மீதி அரைப் பாதி மத்திய அரசுக்கும் பிரித்து
அளிக்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட வரவு இல்லாமையால் கடந்த சில மாதங்களாக
மாநிலங் களுக்கு அளிக்கப்படவில்லை.
மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சி
அமைந்தது முதல் நாடு வளர்ச்சித் திசையில் பயணிக்கவில்லை. மாறாக
பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சிப் பள்ளத்தாக்கில் குடை சாய்ந்து வீழ்ந்து
மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கிறது.
பொருளாதார நிபுணர்கள் கடுமையாக சாடி
வருகின்றனர். வறுமைக் கோட்டுக்கும் கீழ் உழல் வோரின் எண்ணிக்கை 28.5 கோடி
உலக ஊழல் வகையில் 2014இல் 85ஆம் இடத்தில் இருந்த இந்தியா 2016இல் 79ஆம்
இடத்திற்கு வந்து விட்டது.
புதிய இந்தியா (2017-2022) என்ற பிரதமரின்
முழக்கம் மூட்டு வலியால் படுக்கையில் விழுந்ததுதான் மிச்சம். இந்தப்
பொருளாதார நெருக்கடியைத் திசை திருப்பவே காஷ்மீர் பிரச்சினை, ராமன் கோயில்
கட்டுதல், குடியுரிமைத் திருத்த சட்டம் என்று திசை திருப்பும் வேலையில்
இறங்கி விட்டது.
பெரும்பான்மை பலம் என்பது தான்தோன்றித் தனத்துக்கு வழி வகுத்தது கெட்ட வாய்ப்பே!
இந்நிலையில் வரும் 18 ஆம் தேதி ஜி.எஸ்.டி.
கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கெனவே வரி வருமானம் அதிகரிக்கத்
தேவையான ஆலோசனைகளை மாநில அரசிடம் இருந்து கவுன்சில் கோரி உள்ளது. அந்த
ஆலோசனைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்தக்
கூட்டத்தில் ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் மாற்றப்பட உள்ளதாக அதிகார
பூர்வமற்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தத் தகவல்களின்படி இனி ஜி.எஸ்.டி. 8%,
18% மற்றும் 28% என மாற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பிராண்டட்
உணவு வகைகள், மொபைல் போன்கள், பிட்சா, விமானக் கட்டணம், ஏசி ரயில்
கட்டணம், படகுச் சவாரி கட்டணம், பிரபல மருத்துவமனைகளது கட்டணம், பட்டு
போன்ற துணி வகைகளது விலை ஆகியவற்றுக்கான ஜி.எஸ்.டி. விகிதங்கள் அதிகமாவதால்
இந்த விலை மற்றும் கட்டணங்கள் அதிகரிக்க உள்ளதாகச் சொல்லப்பட் டுள்ளது.
எல்லாம் மோடிக்குத் தான் வெளிச்சம்!
No comments:
Post a Comment