டில்லியில் பாலியல் வன்முறை செய்து
கொல்லப்பட்ட நிர்பயாவின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று
அனுசரிக்கப்படுகிறது. இந்த படுகொலைக்குப் பிறகு, பெண்களின் பாதுகாப்புக்காக
மத்திய அரசு ‘நிர்பயா நிதி’ என்ற திட்டத்தை தொடங்கியது. இதன்மூலம்,
பெண்கள் சம்பந்தப்பட்ட பாது காப்பு நடவடிக்கைகளை எடுப்ப தற்காக மாநில
அரசுகளுக்கு பல கோடி ரூபாய் நிதியாக அளிக்கப் படுகிறது. இந்த நிதியை
பல்வேறு மாநிலங்கள் முழுமையாக பயன் படுத்துவது இல்லை என தெரிய வந்துள்ளது.
கடந்த வெள்ளிக் கிழமையுடன் முடிந்த நாடாளு மன்ற கூட்டத் தொடரில், இந்தநிதி
பயன்படுத்தப்பட்ட புள்ளி விவ ரங்களை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்
மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா
நிதிக்காக மத்திய அரசு 1,649 கோடி ஒதுக்கியுள்ளது. இதில், இதுவரை 147
கோடியை மட்டுமே மாநிலங்கள் செலவு செய்துள்ளன. தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட
190.68 கோடியில் வெறும் 3 கோடி மட் டுமே இதுவரை செலவு செய்யப்பட் டுள்ளது.
இது தவிர, அண்மையில் நாட்டையே உலுக்கிய
பாலியல் கொடூர சம்பவங்கள் அரங்கேறிய உபி, தெலங்கானா மாநிலங்களும்
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மிக குறைந்தளவே செலவிட்டுள் ளன.
கருநாடகாவுக்கு ஒதுக்கப் பட்ட 191 கோடியில் 7 சதவீதமும், நிர்பயா கொடூரம்
நிகழ்ந்த டெல் லிக்கு ஒதுக்கப்பட்ட 390 கோடி நிதியில் 5 சதவீதமும் மட்டுமே
செலவிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment