ஜம்மு-காஷ்மீர் விவகாரத் தால்
இந்தியா-பாகிஸ்தான் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்நிலை யில்,
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை இந்தியா ரத்து செய்திருப்பதும்,
அதற்கு பதிலடியாக இந்தியாவுட னான இருதரப்பு உறவை பாகிஸ்தான் முறித்துக்
கொண் டிருப்பதும் இரு நாடுகள் இடையே பதற்றத்தை அதி கரித்துள்ளது.
இந்நிலையில், நியூயார்க் கில் அய்.நா.
பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெ ஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானி
துஜாரிக் செய் தியாளர்களுக்கு பேட்டிய ளித்தார். அப்போது அவரி டம்,
இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் குட்டெரெஸ் ஏன் தலையிட மறுக்கிறார்? என
கேட்கப்பட்டது. அதற்கு துஜாரிக் அளித்த பதில்:
அய்.நா. பொதுச் செயல ருக்கு எந்த
தயக்கமும் இல்லை. ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பொதுச் செயலருக்கு
நன்கு தெரியும். அவர், நிலவரத்தை மிகவும் அக்கறையுடன் கவனித்து வருகிறார்.
இந்தியா, பாகிஸ் தானின் பல்வேறு தரப்புகளு டனும் அவர் பேச்சுவார்த்தை
நடத்தி வருகிறார். இரு நாடு களையும் அதிகபட்ச பொறுமை காக்க வேண்டுமென்று
அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான்
வெளியுறவு அமைச்சரால் எழுதப்பட்ட கடிதம், அய்.நா. வுக்கு கிடைத்துள்ளது.
பாகிஸ்தானின் கோரிக்கையின்படி, அது அய்.நா. பாது காப்பு கவுன்சிலிடம் ஆவண
மாக அளிக்கப்படும். அந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ள சரத்துகளை அய்.நா.
உன்னிப் பாக ஆய்வு செய்து வருகிறது என்றார் அவர்.
அப்போது ஜம்மு-காஷ் மீருக்கு அளிக்கப்பட்ட
சிறப் புத் தகுதியை இந்தியா ரத்து செய்திருப்பது, அய்.நா. பாது காப்பு
கவுன்சில் தீர்மானங்க ளுக்கு எதிரானது ஆகாதா எனக் கேட்கப்பட்டது. அதற்கு
அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். அவர் கூறுகையில், "தற்போது அது குறித்து
கருத்து தெரிவிக்க விரும்பவில்லை' என்றார். அய்.நா. பொதுச் சபையின் தலைவர்
மரியா பெர்னாண்டோ எஸ்பின்சோவின் செய்தித் தொடர்பாளர் மோனிகா கிரெய்லே
கூறுகையில், "நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்' என்றார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மலேசியப்
பிரதமர் மகாதிர் முகமது கூறிய கருத்து: தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதி,
ஸ்தி ரத்தன்மை ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் செய லில் ஈடுபட வேண்டாம்
என்று இந்தியாவையும் பாகிஸ்தா னையும் கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல், இரு நாடு களிடையேயான பதற்றத்தை
அதிகரிக்கும் செயலில் ஈடு படாமல், அதிகபட்ச பொறு மையை இந்தியாவும், பாகிஸ்
தானும் கடைப்பிடிக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment