Friday, August 9, 2019

"70 வருட போராட்டத்துக்கு அமைதியாக தீர்வு காண வேண்டும்!" - காஷ்மீர் குறித்து மலாலா

இந்தியா - பாகிஸ்தானின் எல்லை மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீர் தற்போது இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. காஷ் மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தையும் ரத்துசெய்து அறிவித்துள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு. கடந்த சில நாள்களாக இந்தியாவில் எங்கு திரும் பினாலும் காஷ்மீர் விவகாரம் தொடர்பான பேச்சுக்களே அடிபடுகின்றன.
இந்நிலையில், பாகிஸ் தான் நாட்டைச் சேர்ந்தவ ரும், நோபல் பரிசு பெற்ற வரும், அய்.நா-வின் அமைதிக் கான தூதருமான மலாலா, காஷ்மீர் பிரச்சினை தொடர் பாகக் கருத்து தெரிவித்து உள்ளார். பாகிஸ்தானில் நடந்த கலவரத்துக்குப் பிறகு இங்கிலாந்தில் வசித்துவரும் மலாலா, அங்கிருந்தபடி இந் தக் கருத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
``காஷ்மீரில் உள்ள குழந் தைகள் மற்றும் பெண்கள் தான் இந்த பாதிப்புகளில் அதிகம் பாதிக்கக்கூடியவர் கள். அவர்கள்தான் மோதலி னால் ஏற்படும் இழப்புகளை அதிகம் சந்திக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பை நினைத்து நான் கவலை கொண்டுள்ளேன். தெற்கு ஆசியாவில் உள்ள பன் னாட்டு சமுக அமைப்புகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காஷ்மீர் மக்களின் பாது காப்பு குறித்து கருத்தில் கொள்வார்கள் என நம்புகி றேன்.
எவ்வளவு கருத்து வேறு பாடு இருந்தாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரி மைக்காகப் போராடுவது அவசியமான ஒன்று. 70 வரு டப் போராட்டத்துக்கு அமைதியான முறையில் சுமுகமாகத் தீர்வு காண்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது..

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...