Monday, August 5, 2019

மத்திய அரசின் திட்டமிடப்படாத விளம்பர சீர்திருத்த அறிக்கையால் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது

நிதி ஆயோக் தலைவர் அமிதாப்காந்த்
புதுடில்லி ஆக.5 மத்திய அரசால் மேற்கொள்ளப் பட்ட சீர்திருத்தங்கள், நாட் டின் தற்போதைய மந்த நிலைக்கு வழிவகுத்து இருப்பதாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
பொருளாதார சரிவு குறித்து டில்லியில் நடை பெறும்  உச்சி மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ள நிதி ஆயோக் நிர்வாக தலைவர் அமிதாப் கூறியதாவது:
"முதலாவதாக, அரசு அதிக அளவு பணப்புழக் கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அடுத்து தனியார் துறையின் உரிமத்தை புதுப் பிக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் இல்லாமல், நம்மால் ஒருபோதும் பணப் புழக்கத்தை அதிகரிக்க முடி யாது. மூன்றாவதாக, அர சாங்கம் தொழில்துறை தொடர்பான சில விவகா ரங்களில் இருந்து விலக வேண்டும். குறிப்பாக சாலை கள் உட்பட சில அரசு சொத்துக்கள் தொடர்பான விவகாரங்களை மறுசுழற்சி முறையில் செய்ய வேண்டும். இதை நாம் விமான நிலை யங்களுடன் முன்பே செய் துள்ளோம். எரிவாயு குழாய் இணைப்புகள், பரிமாற்றக் கோடுகள் போன்றவை தனி யாருக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும். பொதுத் துறையை சேர்ந்த நிறுவனங் களை தனியாராக்க நிதி ஆயோக் பரிந்துரைத்துள் ளது. இவற்றை தனியாராக் கினால், வங்கிகள் தரப்பிலி ருந்து தாராளமாக கடன் அளிக்கப்படும். ஆனால் இது முக்கியமான பணி என்பதால் கவனம் அதிகம் தேவைப்படும்.
ஜிஎஸ்டி, அய்பிசி, ரேரா என்று அதிகமான சீர்திருத் தங்கள் இருந்ததே, மந்த நிலைக்கு ஒரு காரணமாகி விட்டது. நாங்கள் மேற் கொண்ட சீர்திருத்தங்கள் எல்லோம் மிகப்பெரிய பணியை கொண்டது. அத் தோடு, எங்களின் அடுத்த சுற்று சீர்திருத்தங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு, சுரங்கம், நிலக்கரி போன்ற துறைகளைச் சார்ந்தே இருக்க வேண்டும். நிலக்கரி சுரங்கங்கள், ரயில்வே துறை போன்றவைகளை அரசு வணிகமயமாக்க வேண்டும். அவ்வாறு செய்யும்பட்சத்தில், அவை உண்மையில் இந்தி யாவிற்கு அதிக அளவிலான வளர்ச்சியை உண்டாக்கும்.
மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதற்கும், ஏற் றுமதி செய்வதற்கும் ஒரு மய்யமாக இந்தியாவை உரு வாக்க அரசாங்கம் முயற்சி களை மேற்கொள்ளும். மொபைல் புரட்சி, தொலைத் தொடர்பு உபகரண புரட் சியை எல்லாம் நாம் எப் போதோ இழந்துவிட்டோம். ஆனால், மின்சார வாக னங்களில் அவை நடக்க நாங்கள் அனுமதிக்க மாட் டோம். உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மய்யமாக இந்தியா மாற்றம் பெறுவதை நாங்கள் விரைந்து உறுதி செய்வோம் என்று தெரிவித்தார். நாடு முழுவதும்  4,000 விசாரணை நீதிபதிகள் நியமனம்: ரஞ்சன் கோகோய்  கவுகாத்தி, ஆக.5 நாடு முழுவதும் 4,000 விசாரணை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள் ளனர் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்தார். அசாம் மாநிலம், கவு காத்தியில் உயர்நீதி மன்ற வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்காக ரஞ்சன் கோகோய் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார்.  அப்போது, அவர் பேசியதாவது: ஆயிரத்துக்கும் மேற்பட்ட 50 ஆண்டுகால வழக்குகளும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட 25 ஆண்டு கால வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அசாமில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து தீர்த்து வைக்க வேண்டும். கடந்த மாதம் 10ஆம் தேதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டேன்.
20 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் அழைப் பாணைகள்கூட இன்னும் அனுப்பப்படவில்லை. நாடு முழுவதும் காலியாக இருந்த 6,000 நீதிபதி பணியிடங்களில் 4,000 பணியிடங்கள் ஏற்கெனவே நிரப்பப்பட்டுவிட்டன. மேலும், 1,500 நீதிபதி பணியிடங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிரப்பப்படும். தனிநபர்களும், சில அமைப்புகளும் பொறுப்பின்றி இருப்பதை இன்றைய காலகட்டத்தில் பார்க்க முடிகிறது. இது விதிவிலக்குதான். நாட்டின் சட்ட பூர்வமான அமைப்புகள் இவர்களை மாற்றிவிடும் என்று நம்புகிறேன். நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகளையும், உத்தரவுகளையும் வைத்துதான் மக்கள் நீதித் துறை மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கையில்தான் நமது நீதித் துறை உயிர்ப்புடன் இயங்கி வருகிறது. அசாமில் பல்வேறு வகையான கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நீதிபதிகளும், நீதித் துறை அதிகாரிகளும் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று ரஞ்சன் கோகோய் தெரிவித்தார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...