இதுகுறித்து ஈரோடு மாவட்ட காங்கிரஸ்
சிறுபான்மைத்துறை துணைத்தலைவரும், தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள்
உறுப்பினருமான பாஷா மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயலுக்கு அனுப்பிய
மனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு பல்வேறு துறைகளை தனியார்
மயமாக்க திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ரயில்களை தனியார் இயக்கும் முடிவை
கையில் எடுத்துள்ளது. முதல்கட்டமாக, டில்லி -லக்னோ இடையிலான தேஜாஸ்
எக்ஸ்பிரஸ் ரயிலை தனியார் இயக்க மத்திய அரசு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு
அனுமதி அளித்துள்ளது. சென்னை-மதுரை இடையிலான தேஜால் ரயில், கோவை-சென்னை வரை
செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் ஆகியவற்றை இயக்கும் பொறுப்பை
தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ரயில்களை இயக்கும் பொறுப்பை தனியார்வசம்
ஒப்படைக்கும்பட்சத்தில் அரசு அளித்து வரும் 52 சதவீத மானியம் ரத்து
செய்யப்படும். இதனால், பயணிகள் கட்டணம் பல மடங்கு உயரும். காஷ்மீர் முதல்
கன்னியாகுமரி வரை எந்த ரயில் நிலையத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
தனியார் வசம் ஒப்படைத்தால் ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் தனி புக்கிங்
கவுன்டர், முன்பதிவில்லாத டிக்கெட் வாங்குவதில் சிக்கல் ஏற்படும்.
ஆகவே, மத்திய அரசு இந்த முடிவை
மறுபரிசீலனை செய்து தனியார் வசம் ஒப்படைப்பதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க
வேண்டும். இல்லையென்றால் வரும் 15ஆம் தேதி மாவட்ட காங்கிரஸ்
சிறுபான்மைத்துறை சார்பில் ஈரோடு ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்தப்படும்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.
No comments:
Post a Comment