தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளிகளில் பிற மொழிகளில் படித்த ஆசிரியர்கள் பலர் பணிபுரி கின்றனர். தமிழக
அரசின் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டப்படி 2 ஆண்டுகளுக்குள் டிஎன்பிஎஸ்சி
நடத்தும் தமிழ் மொழிக்கான கட்டாயத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கை:
சட்ட விதிகளைப் பின்பற்றி பணியில்
சேர்ந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழ் தேர்வை முடிக்காத ஆசிரியர்கள் மீது
எடுக்கப்பட்ட நடவ டிக்கை விவரங்களை அறிக்கையாக முதன்மைக் கல்வி அதிகாரிகள்
சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தமிழ் தேர்வை முடிக்காதவர்கள்மீது
துறைரீதியாக தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தவேண்டும்.
No comments:
Post a Comment