சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை,
அண்மையில் ஒரு காவல் உதவி ஆய்வாளர் தொடர்ந்த வழக்கை விசாரித் தது. வழக்கின்
முடிவில், தமிழக டிஜிபிக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதில் அரசு
ஊழியர்கள் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும். அரசு அலுவலகங்க ளிலும்,
வெளியிடங்களிலும் அவர்களின் நடத்தை கண்ணியமானதாக இருக்க வேண்டும்.
மேலும், காவல்துறையில் பரிசுப் பொருள்களை
பரிமாறிக்கொள்வது அதிக அளவில் இப்போது நடை பெறுகிறது. காவல்துறை
அதிகாரிகள், பரிசுப்பொருள்கள், வரதட்சிணை பெறு வது காவல்துறை நடத்தை விதி
4-க்கு எதிரானது. இது தடுக்கப்பட வேண்டும். எனவே, தமிழக காவல்துறை சீருடைப்
பணிக்கான ஒழுக்கத்தையும், மதிப்பையும் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும். காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் பூங்கொத்துகள், பரிசுப்
பொருட்கள், வரதட்சிணை பெறுவதை தடுக்கவும், காவல்துறை நடத்தை விதி களை
கடுமையாக பின்பற்றுவது தொடர் பாக தமிழக காவல்துறையின் சட்டம்- ஒழுங்கு
டிஜிபி 6 வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில்
குறிப்பிடப்பட்டிருந்தது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து,
தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி
செவ்வாய்க்கிழமை இது தொடர்பாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், தமிழக
காவல்துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள காவல்துறை அதிகாரிகள் வரதட்சிணை,
பரிசுப் பொருள்கள் வாங்கக் கூடாது; பூங்கொத்துக்களும் வாங்கக் கூடாது.
அதிகாரிகள், வரதட்சிணை வாங்கவும், கொடுக்கவும் கூடாது.
திருமணம், பிறந்த நாள் கொண் டாட்டம், மத
விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ரூ.200 க்கு மேல் மதிப்புள்ள எந்த
பரிசுப் பொருளையும் அதிகாரிகள் வாங்க வேண்டாம். காவல்துறை அதிகாரிகள்,
தங்களது குடும்பத்துக்குள் பரிசுப்பொருள்களை பரிமாறிக் கொள் ளலாம். அதை
தவிர்த்து வேறு யாரிடமும் பரிசுப்பொருள்களை பெறக் கூடாது. அதேபோல,
காவல்துறை வாகனத்தில் அதிகாரிகள், தங்களது குடும்பத்தினர்கள், வீட்டில்
இருக்கும் வளர்ப்பு பிராணிகள் பயணிக்க அனுமதிக்கக் கூடாது என்று அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு சுற்றறிக்கையாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment